கடைசி டெஸ்ட்க்கு முன் இந்தியா சரி செய்ய வேண்டிய 4 விசயங்கள் ! இல்லனா காலி

0
1450

இந்தியா கடைசி 10 ஆண்டுகளாக தனது சொந்த மண்ணில் சிவப்பு நிற பந்தில் அசைக்க முடியாத கோட்டையை கட்டி இருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்தியா வெறும் மூன்றே மூன்று டெஸ்ட் போட்டிகளில் தான் தோல்வியை தழுவி இருக்கிறது. எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டி கொண்டு தொடரில் தற்போது இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர் சமனில் முடிந்துவிடும். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய மானப் பிரச்சினையாக மாறிவிடும். இதனால் இந்திய அணி தங்களிடம் உள்ள குறையை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் பிரச்சினையே பேட்டிங் தான். கடந்த இரண்டு டெஸ்ட்டிலும் ரோகித் சர்மா அக்சர் பட்டேல், ஜடேஜா அஸ்வின் ஆகியோரால் தான் இந்தியா வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் புஜாராவை தவிர வேறு எந்த ஒரு வீரரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ராகுலுக்கு மாற்றுவீராக களமிறங்கிய சுப்மன் கில்  சொதப்பினார்.

அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் ரோஹித் சர்மாவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலி கடந்த 10 இன்னிங்ஸ்களாக அரை சதமே அடிக்கவில்லை. இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடைசி டெஸ்டில் ஏதேனும் இரண்டு வீரர் பெரிய ஸ்கோர் அடித்தால் அது நன்மையில் போய் முடியும்.

- Advertisement -

இந்தியா அடுத்ததாக சரி செய்ய வேண்டியது ஆடுகளத்தை தான். தற்போது இந்தூர் டெஸ்ட் ஆடுகளத்தை மோசமாக இருப்பதாக ஐசிசி அறிவித்திருக்கிறது. இதனால் அடுத்த போட்டியில் பயன்படுத்தப்படும் ஆடுகளத்தில் பிசிசிஐ தனி கவனத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அனைத்துப் போட்டிகளும் மூன்றே நாட்களில் முடிந்து விடுவதால் ரசிகர்களும் கடுப்பில் இருக்கிறார்கள்.

இதனால் பேட்டிங்கிற்கும் பந்திருக்கும் சரிசமமான நிலையில் இருக்க வேண்டிய ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும். மூன்றாவது இந்திய அணி களத்தில் டிஆர்எஸ்ஐ சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி டிஆர்எஸ்ஐ தவறாக பயன்படுத்தியது. குறிப்பாக அஸ்வினின் ஒரு விக்கெட் டி ஆர் எஸ்  சரியாக பயன்படுத்தாமல் விட்டதால் பறிபோனது.

இதனால் கைவசம் இருக்கும் மூன்று டி ஆர் எஸ் ஐ தேவை இல்லாமல் வீணடித்து விடக்கூடாது. இதைப் போன்று நான்காவது விஷயம் இந்திய அணி பந்து வீச்சில் நோபால்களை வீசக்கூடாது. ஜடேஜாவின் ஒரு நோபல் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை பந்துவீச்சாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.