“இந்தியாவுக்கு அதிர்ஷ்டமான 5 நாள் வேணும்.. அதுக்கு இந்த 2 பிளேயர் வேண்டாம்!” – சோயப் அக்தர் பரபரப்பான பேச்சு!

0
1025
Akthar

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்கிறது. மற்ற எந்த உலகக் கோப்பையையும் விட இந்த உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் ஐந்து ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா அதிரடியான துவக்கம் தர, விராட் கோலி அடுத்து வந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, எந்தச் சிரமமும் இன்றி இந்திய அணி வெற்றி பெற்று வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஆறாவது போட்டியில் பேட்டிங் செய்ய கடினமான லக்னோ மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி 229 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் இந்த மாதிரியான நிலைமைதான் ஏற்படும் என்று பேச்சுகள் அந்த நேரத்தில் எழுந்தது உண்மை. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் மொத்தமாக மாற்றி விட்டார்கள். நூறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணிக்கு அதிரடியான வெற்றியை கொண்டு வந்தார்கள்.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு கவலை தரும் விஷயமாக இருந்தது ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடும் முறைதான். அவர் தொடர்ச்சியாக ஷார்ட் பந்துகளுக்கு ஆட்டம் இழந்து கொண்டே இருக்கிறார். மேலும் அந்த பந்துகளை அடிக்காமல் விடவும் செய்வதில்லை. அடித்து ஆட்டம் இழப்பது கவலை தருவதாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணி குறித்து பேசி உள்ள சோயப் அக்தர் “இந்தியா பேட்டிங்கால் வெற்றி பெறுகிறது என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அவர்கள் 229 ரன்கள் பேட்டிங்கில் எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் பந்துவீச்சில் வெற்றி பெறுகிறார்கள்.

இது உண்மையிலும் மிகப்பெரிய விஷயம். இந்திய பந்து வீச்சுக்கு குறிப்பாக பும்ராவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு வேகப்பந்துவீச்சாளர்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்ல தற்பொழுது அதிர்ஷ்டமான ஐந்து நாட்கள் வேண்டும். அவர்கள் தோல்வி அடையாமல் சென்று உலகக் கோப்பையை வென்றால் அது சிறந்த உலக சாதனையாக இருக்கும். அரை இறுதியிலோ அல்லது இறுதிப் போட்டியில் அவர்களுக்கு எந்த துரதிஷ்டமும் ஏற்படாது என்று நம்புகிறேன்.

உடல் பகுதியில் தற்பொழுது காயத்தால் பின்தங்கி இருக்கும் ஹர்திக் பாண்டியா இந்திய பந்துவீச்சை பலவீனப்படுத்தக் கூடியவராக இருப்பார். அவரை கொண்டு வரும் பொழுது ஒரு நல்ல பந்துவீச்சாளரை இந்திய அணி இழக்க வேண்டும். மேலும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடமும் கேள்விக்குறியானது!” என்று கூறியிருக்கிறார்!