“இந்தியாவுக்கு இருக்கு.. இங்கிலாந்து காயம் பட்ட சிங்கம்.. சும்மா விடாது!” – வாசிம் அக்ரம் வெளிப்படையான எச்சரிக்கை!

0
3014
Akram

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மிகவும் சுவாரசியமான தொடராக மாற்றி இருக்கின்றன.

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடக்கப்போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்து மோதிக்கொண்டன. இந்தப் போட்டிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் வரவில்லை, உலகக் கோப்பை தொடர் பெரிய அளவில் வெற்றி பெறாது என்று வெளியில் பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் அதிரடியான பேட்டி அணுகுமுறை கொண்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, பேட்டிங் செய்ய சாதகமான சிறிய மைதானமான டெல்லியில் வைத்து ஆப்கானிஸ்தான் அணி வென்றதிலிருந்து, உலகக் கோப்பைத் தொடர் சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக அனைத்து அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்புகள் திறக்கப்பட்டது.

இதற்கு அடுத்த நாளே நெதர்லாந்து இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்கும் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த, புள்ளி பட்டியலில் மேலும் விடுகதைகள் உருவாகின. இது இன்னும் உலகக்கோப்பை தொடரை சுவாரஸ்யம் ஆக்கியது.

இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் அணி மீண்டும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்றி இருக்கிறது. தற்பொழுது நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து இந்த இரண்டு அணிகள்தான் உலகக் கோப்பை தொடருக்கு எதிர்பார்ப்பை ஏற்றிய அணிகளாக மாறியிருக்கின்றன.

- Advertisement -

தற்பொழுது நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் கடைசி பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அடுத்த போட்டியில் லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணி எதிர்த்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இங்கிலாந்துக்கு எதிராக நிச்சயம் இந்தியா வெற்றி பெறதான் விரும்புவோம். ஆனால் இங்கிலாந்து காயம்பட்ட சிங்கங்கள். அவர்கள் அடுத்து வரும் எல்லா போட்டியையும் வெல்ல வேண்டும் என்பதை அறிவார்கள். மேலும் அவர்கள் விளையாட்டை வித்தியாசமாக அணுகுவதை காணலாம். இருப்பினும் இந்தியா அளவான கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷத்துடன் விளையாடுகிறது!” என்று கூறி இருக்கிறார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறும் பொழுது “2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியை கூட தோற்காமல் வென்றதைப் போல இந்திய அணியும் இந்த முறை வெல்லும் என்று நம்புகிறேன். முன்னாள் இந்திய வீரனாகவும் இந்தியனாகவும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்!” என்று கூறியுள்ளார்,