“ராபின் உத்தப்பா 88*! கௌதம் கம்பீர் 61* ! ஆசிய லயன்சை பந்தாடிய இந்திய மகாராஜா’…. அட்டகாசமான போட்டியின் விபரங்கள்!

0
2944

லெஜெண்ட் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் ஓய்வு பெற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. லெஜன்ட் லீக்ஸ் கிரிக்கெட்டில் இது மூன்றாவது சீசன் ஆகும். இந்தப் போட்டி தொடரில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா மகாராஜாஸ் சாகித் அப்ரிதி தலைமையிலான ஏசியா லயன்ஸ் அணி மற்றும் ஆரோன் பின்ச் தலைமையிலான வேர்ல்ட் ஜயன்ஸ் அணியும் பங்கேற்கின்றன.

சென்ற வருடத்திற்கான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஓமன் நாட்டில் நடைபெற்றது . தற்போதைய போட்டிகள் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னணி வீரர்கள் பலரும் கலந்துகொண்டு விளையாடுவதால் இதற்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு இருக்கிறது.

- Advertisement -

இந்த கிரிக்கெட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா க்ரிஷ் கெயில் சாகித் அப்ரிதி அப்துல் ரசாக் மிஸ்பா உல் ஹக் திலகரத்தினே தில்சான் பிரெட் லீ சோயம் அக்தர் இர்பான் பதான் ராபின் உத்தப்பா போன்ற முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் கம்பீர் தலைமையிலான இந்திய மகாராஜா அணி மிஸ்பா உல் ஹக் தலைமையிலான ஆசியா லயன்ஸ் அணியை பத்தி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவ்வாறு வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆசியா லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணிக்காக துவக்க வீரர்களாக களம் இறங்கிய இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர்கள் உப்பல் தரங்கா மற்றும் திலகரத்தினே தில்ஷான் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். சிறப்பாக ஆடிய தரங்கா 48 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் உட்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருக்கு துணையாக ஆடிய தில்சான் முப்பத்தி இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய அப்துல் ரசாக் 17 பந்துகளில் 27 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.

இந்திய மகாராஜா அணியின் பந்துவீச்சில் சுரேஷ் ரெய்னா இரண்டு விக்கெட்களையும் பிரவீன் தாம்பே ஹர்பஜன்சிங் மற்றும் ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகாராஜா அணியினர் கௌதம் கம்பீர் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 12.3 ஓவர்களில் 158 ரன்களை விக்கெட் இழப்பின்றி செஸ் செய்து வெற்றி பெற்றனர்.

- Advertisement -

இந்திய மகாராஜா அணிக்காக அதிரடியாக ஆடிய உத்தப்பா 39 பந்துகளில் 88 ரன்களை குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் ஐந்து சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். இவருக்கு உறுதுணையாக ஆடிய கௌதம் கம்பீர் 36 பந்துகளில் 61 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய மகாராஜா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ராபின் உத்தப்பா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.