2 முக்கிய வீரர்களை வெளியேற்றிய இந்திய அணி.. 2வது ஒருநாள் போட்டியில் அதிரடி!

0
1412

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு முக்கிய மாற்றங்களுடன் களமிறங்குகிறது இந்திய அணி.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வரும் ஒருநாள் தொடர் தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரில் பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்குகிறது.

கடந்த போட்டியில் இடம்பெறாமல் இருந்த அக்ஸர் பட்டேல் மீண்டும் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார். அதேபோல் வேகப்பந்து வீச்சில் உம்ரான் மாலிக் பிளேயிங் லெவனில் வந்திருக்கிறார்.

சபாஷ் அகமது மற்றும் குல்தீப் சென் இருவரும் இப்போட்டியில் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். இந்த இரண்டு முக்கிய மாற்றங்களுடன் இந்திய அணி களம் இறங்குகிறது.

- Advertisement -

அதேபோல் வங்கதேச அணி ஒரு முக்கிய மாற்றத்தை செய்து இருக்கிறது. ஹாசன் முகமது என்பவர் வெளியில் அமர்த்தப்பட்டு நசும் அஹ்மத் உள்ளே எடுத்து வரப்பட்டிருக்கிறார்.

இன்றைய போட்டியில் விளையாடப்படும் பிட்ச் பற்றி பார்க்கையில், முதல் போட்டியில் விளையாடிய பிட்ச்சில் டர்ன், பவுன்ஸ் மற்றும் சிறிய அளவிலான ஒரு பிடிமானம் இருந்தது. ஆனால் இன்றைய போட்டியில் விளையாடப்படும் பிட்ச் நன்றாக பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். நீண்ட நேரம் பேட்டிங் செய்யலாம். நல்ல பாட்னர்ஷிப் வைக்கலாம். ஒட்டுமொத்தமாக முழு பேட்டிங் பிட்ச்சாக இருக்கும்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்

இன்றைய போட்டியில் களம் இறங்கும் வங்கதேச அணி

நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ்(கேப்டன்), அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம்(கீப்பர்), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடோட் ஹொசைன், முஸ்தபிஜுர் ரஹ்மான்