2வது ODI.. இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.. ஆஸி அபார வெற்றி.. தோல்விக்கு காரணம் என்ன?

0
208
Rohit

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுடன் தொடரையும் இழந்திருக்கிறது.

மூன்று போர்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

காப்பாற்றிய ரோஹித் ஸ்ரேயாஸ்

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் கில் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி மூன்று பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட் ஆகி வெளியேறினார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 97 பந்தில் 73 ரன், ஸ்ரேயாஸ் ஐயர் 77 பந்தில் 61 ரன், அக்சர் படேல் 41 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய அனுபவம் இல்லாத மேத்யூ ஷார்ட் 78 பந்தில் 74 ரன்கள், மிட்சல் ஓவன் அதிரடியாக 23 பந்தில் 36 ரன்கள், சிறப்பாக விளையாடிய இளம் வீரர் கூப்பர் கனொலி ஆட்டம் இழக்காமல் 53 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதையும் படிங்க : 8 விக்கெட்.. தெ.ஆ வேற லெவல் வெற்றி.. இந்திய அணிக்கு எச்சரிக்கை.. பாகிஸ்தான் தோல்வி.. 2வது டெஸ்ட்

இந்திய அணி தோல்வி அடைந்த இரண்டு போட்டிகளிலும் முதன்மை ஸ்பின்னர் குல்தீப் யாதவை விளையாட வைக்காதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. மேலும் மழையின் காரணமாக முதலில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இந்திய அணி 2 போட்டியிலும் டாஸ் தோற்றதும் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கிறது.

- Advertisement -