கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்தியாவிற்கு காத்திருக்கும் கவுரவம் – ஐசிசி அறிவிப்பு!

0
2505

3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால் இந்திய அணியை கௌரவிக்க காத்திருக்கிறது ஐசிசி.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிவரும் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகள் அடங்கியுள்ளன.

- Advertisement -

ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்ததாக மிர்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என ஒரு நாள் தொடரை கைப்பற்றி விட்டது

இந்நிலையில் தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியை விளையாட இந்திய வீரர்கள் இந்தூர் மைதானத்திற்கு சென்றுள்ளனர். இங்கு நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3-0 என ஒயிட்வாஷ் செய்வதற்கு இந்திய அணி காத்திருக்கிறது.

தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், முதல் இடத்தில் நியூசிலாந்து அணி இருக்கின்றது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. மூன்றாவது இடத்தில் இந்திய அணி இடம்பெற்று இருக்கிறது. இந்த மூன்று அணிகளும் தலா 113 புள்ளிகள் பெற்றுள்ளன.

- Advertisement -

முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை கடைசி ஒருநாள் போட்டியில் வீழ்த்தி 3-0 என தொடரை கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணி தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டு மீண்டும் முதலிடத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ஐசிசி தரப்பில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவினால், நியூசிலாந்து அணி கூடுதல் புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடிக்கும். இங்கிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை இந்திய அணி பிடிக்க முடியும்.

மூன்றாவது ஒருநாள் போட்டியை பொருத்தவரை, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அசத்திய முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சமி மற்றும் சிராஜ் இருவருக்கும் ஓய்வு கொடுக்கவுள்ளதாக ரோகித் சர்மா மறைமுகமாக குறிப்பிட்டார்.