“இந்தியா யாரையும் தோற்கடிக்க தயாரா இருக்கு.. ஆனா ஒரு விஷயம்தான்..!” – மைக் ஹசி பாராட்டில் கவலை!

0
8537
Hussey

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தற்போது லீக் சுற்றுகள் முடிவடைந்து இருக்கின்றன. புள்ளி பட்டியலில் அரையிறுதிக்கான முதல் நான்கு இடங்களை இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பிடித்திருக்கின்றன.

இந்த நிலையில் நாளை மறுநாள் நவம்பர் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணி எதிர்த்து முதல் அரை இறுதியில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது அரை இறுதியில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன.

இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை சொந்த நாட்டில் வென்று இருந்தது. மீண்டும் சொந்த நாட்டில் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரையில் இந்தியா அணிக்கு எல்லாமே மிக நல்லவிதமாக சென்று இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி கூறும்பொழுது “இந்திய அணி அழகாக இருக்கிறது இல்லையா? அவர்கள் ஆச்சரியமாக இருக்கிறார்கள். மேலும் எல்லா தளங்களையும் உள்ளடக்கி இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். தற்பொழுது அவர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.

- Advertisement -

வெளிப்படையாக அவர்கள் யாரையும் தோற்கடிக்கும் அணியாக தெரிகிறார்கள். எனக்கு இந்தியா அவர்களின் சொந்த மக்களின் முன்னால் விளையாடி, எப்படி அழுத்தம் இல்லாமல் நாக் அவுட் சுற்றில் விளையாடுவார்கள் என்பது குறித்துதான் கேள்விக்குறியாக இருக்கிறது. இது அவர்களின் மனநிலையை மாற்றுமா? என்று பார்க்க வேண்டும்.

இந்த தலைமுறை வீரர்கள் பற்றிய என்னுடைய அவதானிப்பு என்னவென்றால், இவர்கள் உண்மையில் எதற்கும் கவலைப்படுவது கிடையாது. குறிப்பாக இவர்கள் கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது.

அவர்கள் தங்கள் விதியை தானே எழுதுகிறார்கள். இந்த புதிய தலைமுறை இந்திய வீரர்கள் இப்படித்தான் கவலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பழைய தழும்புகளை எல்லாம் விட்டுவிட்டு எப்பொழுதும் புதிய விதியை உருவாக்குவதில் கவனமாக இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!