“இந்தியா திட்டம் போட்டு எங்களை தோக்க வைக்குது.. ஆப்கான் எங்களை ஜெயிக்கனும்னு !” – முகமது ஹபீஸ் அதிரடியான குற்றச்சாட்டு!

0
5292
Hafeez

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் பொழுது பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா சென்னை சேப்பாக்கம் மோதிய போட்டியின் ஆடுகளம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எதுவுமே செய்ய முடியவில்லை.

அந்த போட்டியில் திடீரென்று ஆட்டத்திற்குள் நுழைந்த ரவீந்திர ஜடேஜா, இரண்டு மூன்று ஓவர்களில் மொத்த ஆஸ்திரேலியா அணியும் சீர்குலைய வைத்து விட்டார். அவர்கள் ஏற்படுத்திய அடிப்படையை உடைத்து விட்டார்.

இதன் காரணமாகவே அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா இரண்டு ரன்கள் மூன்று விக்கெட் இழந்த போதிலும் கூட இந்த குறைவான ரன் காரணமாகவே முதல் போட்டியில் வெற்றி பெற முடிந்தது. தற்போது இந்திய அணியின் வெற்றிகரமான பயணத்திற்கு மிகவும் முக்கியமாக இது அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கு பயன்படுத்தப்படுவது குறித்து, பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் அதிரடியான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து போட்டிக்கு முன்பாக அவர் கூறும் பொழுது ” போட்டி துவங்க இருக்கிறது. இது இந்தியா ஆஸ்திரேலியா மோதிய போட்டிக்கான ஆடுகளம் ஆகும். ஆனால் இந்த ஆடுகளத்தை இதற்கு அடுத்து எந்த போட்டிக்கும் கொடுக்கவில்லை. இந்தப் போட்டிக்கு என மட்டுமே வைத்து கொடுக்கிறார்கள்!” என குற்றம் சாட்டி இருக்கிறார்.

சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வேண்டும் என்றே பாகிஸ்தான் அணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை கொடுத்திருக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்பே குற்றம் சாட்டி இருந்தது. இந்த நிலையில் அதையே ஹபீஸ் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நேற்று பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி “நாங்கள் நினைத்தது போல் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் விளையாடிய ஆடுகளம் போல் இல்லை. திடீரென்று மாறிவிட்டது!” என்று உண்மையை உடைத்திருக்கிறார்!