“2019லயும் இந்தியாதான் எங்களுக்கு பிரச்சனை.. இனி எல்லா போட்டியும் பைனல்தான்!” – கம்மின்ஸ் ஒளிவு மறைவு இல்லாத பேச்சு!

0
583
Cummins

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை அதிக முறை வென்ற ஆஸ்திரேலியா அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வியடைந்து இருக்கிறது.

பொதுவாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் பெரிய அணிகளாக ஆறு அணிகள் இருக்கின்றன. இந்த ஆறு அணிகள் தங்களுக்குள் எத்தனை ஆட்டங்களில் வெல்கின்றன தோற்கின்றன என்பதை பொறுத்தே, அவர்களது வெற்றி வாய்ப்பு அமையும்.

- Advertisement -

இந்த வகையில் ஆஸ்திரேலியா அணி பெரிய இரண்டு அணிகளிடம் தோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால், மற்ற மூன்று பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அப்படி வெற்றி பெறும் பட்சத்தில்தான் அரையிறுதி வாய்ப்பு இருக்கும்.

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது ” 2019 உலகக்கோப்பையில் நாங்கள் தோற்ற இரண்டு அணிகள் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா. இந்த இரண்டு அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவதுதான் எங்களுக்கு பெரிய சிரமமாக இருந்தது.

எனவே எங்களுக்கு உள்ள வாய்ப்பு என்றால், நாங்கள் சில காலமாக எதிர்த்து விளையாடாத சில அணிகளுக்கு எதிராக நாங்கள் நிறைய வெற்றிகளை பெற்றிருக்கிறோம். எனவே அவர்களுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கை உடன் இருக்கிறோம்.

- Advertisement -

எங்களுக்கு ஒரு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. எல்லோருமே அதற்காக ஆசைப்படுகிறார்கள். நாங்கள் வெளிப்படையாகவே பின்தங்கி இருக்கிறோம். நாங்கள் விரைவாக வெற்றி பெறத் தொடங்க வேண்டும். இப்போது ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு இறுதி போட்டி போலாகிவிட்டது.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் எங்களுடைய தகுதிக்கு தகுந்தவாறு நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் குறி தவறி இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தோம். நாங்கள் சிறந்த நிலையில் இருக்கும்பொழுது நிறைய ரன்கள் குவிக்கிறோம். அப்பொழுது எதிர் அணிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்.

இதுவரை எதுவும் சரியாக செல்லாமல் இருந்து வருகிறது. நாங்கள் சரியாக ஒருங்கிணைக்காமல் இருந்து வருகிறோம். எங்களை எது நல்ல அணியாக மாற்றும் என்று எங்களுக்கு தெரியும்!” என்று கூறியிருக்கிறார்!