நேர்மையா சொல்றேன்.. இந்தியா இந்தியாவுல மட்டும்தான்.. ஆனா பாகிஸ்தான்.. சரவெடியை கொளுத்திய சோயப் அக்தர்!

0
1110
Akthar

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பதற்கு முன்பாக, ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடப்பது, பங்கேற்கும் அணி நிர்வாகங்களை விட, பங்கேற்கும் நாட்டின் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி இருந்தது.

காரணம், தமது விருப்ப அணி எந்த நிலைமையில் இருக்கிறது? தன்னுடைய பிரதான எதிரணியை வெல்லும் அளவிற்கு இருக்கிறதா? என்பது குறித்து நேரடியாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக ரசிகர்கள் ஆசியக் கோப்பை தொடரை பார்க்கிறார்கள். இதில் கிடைக்கும் முடிவுகள் அவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று!

- Advertisement -

இப்படிப்பட்ட முக்கியத்துவம் பொருந்தி இருக்கின்ற காரணத்தினால்தான், இலங்கையில் ஆசியக் கோப்பை தொடர் மழையால் பாதிக்கப்படுகின்ற விஷயம், ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி, கடுமையான விமர்சனங்களை செய்ய வைக்கிறது. இதற்கு பயந்தே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே என அறிவிக்கும் அளவுக்கு போயிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது நடைபெறும் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டி எப்படியானது? இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் எப்படியானது? யார் வெல்வார்கள்? என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் சோயப் அக்தர் பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
“பாகிஸ்தான் அணிக்கு ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர் குறைகிறது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு சென்று விளையாடும் பொழுது, அங்கு இந்தியாதான் பெரிய அணி. இதை நான் நேர்மையாகவே சொல்கிறேன். அதே இந்தியாவுக்கு வெளியே நடக்கும் ஆசிய கோப்பை எனும் பொழுது கதை வேறு.

- Advertisement -

துணைக் கண்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலமானவை. இந்தியாவை இந்தியாவில் வெல்வது கடினம். அதேபோல் பாகிஸ்தானை துணை கண்டத்தில் வெல்வது கடினம். இரண்டு அணிகளுமே மிக பலமாக இருக்கின்றன. இரண்டு அணிகளிலும் நல்ல வேகப்பந்து வீச்சு இருக்கிறது. இதில் ஒரு அணிக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. சுழற் பந்துவீச்சு ஒரு அணிக்கு சிறப்பாக இருக்கிறது. இரண்டு அணிகளுமே நம்பிக்கையாக இருக்கின்றன.

பாகிஸ்தானுக்கு முன்பு இருந்த பேட்டிங் யூனிட் கொஞ்சம் உடைந்து காணப்பட்டது. ஆனால் இப்பொழுது இவர்கள் செட்டில் செய்யப்பட்ட ஒரு அணியாக இருக்கிறார்கள். மொத்தமாக இந்த பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் இவர்கள் நன்றாக தெரிகிறார்கள். இவர்கள் வெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!