“இந்தியா இரக்கமற்ற அணியாக மாறி வருகிறது.. அவங்கள தடுக்க முடியுமானு தெரியல!” – சோயப் அக்தர் ஆச்சரியமான பேச்சு!

0
3651
Akthar

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அது எப்பொழுதும் பேட்ஸ்மேன்களின் முகமாகவே இருந்து வந்திருக்கிறது. தற்சமயத்தில் கூட விராட் கோலிதான் முக்கியமான வீரராக இந்திய அணியில் பார்க்கப்படுகிறார்.

ஆனால் சில காலமாக இந்திய அணியின் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் குறிப்பாக வேகப்பந்து வீச்சு அசுரத்தனமான வளர்ச்சி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியை பெற ஆரம்பித்தது. இதில் பழைய கேப்டன் விராட் கோலி மற்றும் பழைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

இந்த நிலையில் நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு இந்திய வேகப் பந்துவீச்சுத் துறை மிகச் சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. தற்பொழுது அந்த வளர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கிறது என்று கூறலாம்.

நேற்று இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு என்பது உலகின் எந்த பேட்ஸ்மேன்களும் எதிர்கொண்டு விளையாடுவதற்கு கடினமான ஒரு தாக்குதலாகத்தான் இருந்தது.

- Advertisement -

பும்ரா, சமி, சிராஜ் இந்த மூவரும் ஒன்று சேரும்பொழுது, இவர்கள் உலகின் மிக ஆபத்தான வேகப்பந்து வீச்சு கூட்டணியாக மாறிவிடுகிறார்கள். இவர்களை ஒரே நேரத்தில் சந்தித்து விளையாடுவது என்பது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிரமத்தை தரக்கூடியதாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த கூட்டணி பற்றி பேசி உள்ள பாகிஸ்தான அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறும் பொழுது “இந்தியா இரக்கமற்ற அணியாக மாறி வருகிறது. அவர்களைத் தடுத்து நிறுத்துவது கடினம். ஆனால் இப்பொழுது இந்தியா அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் நேற்று மும்பையில் ஒவ்வொரு பந்திலும் உற்சாகம் தெறித்தது.

முகமது ஷமிக்காக நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் ரிதத்திற்கு வந்துவிட்டார். அவர் மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். சிராஜும் தீ மாதிரி இருக்கிறார்.

இதில் முக்கியமான ஆயுதம் பும்ராதான். அவர் மற்ற இருவரையும் சுதந்திரமாக பந்து வீச அனுமதிக்கிறார். அவருடைய திறமை மிகவும் அபாரமான வித்தியாசமானதாக இருக்கிறது. இவர்கள் மூவரும் தொடர்ச்சியாக உடல் தகுதியோடு இருப்பார்கள் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!