“இந்தியா நல்ல டீம்தான்.. ஆனா உலக கோப்பையை இந்த 2 விஷயத்தால் இழக்க போகுது!” – சயித் அன்வர் பகிங்கர எச்சரிக்கை!

0
6641
Anwar

இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கான நாள் எண்ணிக்கை, இரட்டை இலக்கத்தில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிட்டது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் துவங்க இன்னும் 9 நாட்கள்தான் இருக்கிறது. அடுத்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி உலகக்கோப்பை துவங்க, அதற்கு முன்னதாக தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றன.

- Advertisement -

இந்தியா தன்னுடைய இரண்டு பயிற்சி போட்டிகளில் முதலில் இங்கிலாந்தையும் அடுத்து நெதர்லாந்து அணியையும் எதிர்த்து விளையாடியிருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு ஆசியக் கோப்பையும் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடரும் சிறந்த பயிற்சியாகவே அமைந்திருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, அதன் மீது என்னென்ன சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் இருந்ததோ, அது அத்தனையும் தற்பொழுது தீர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த வகையில் இந்திய அணி நிர்வாகத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரிய ஒன்றாக இருக்கிறது.

உதாரணமாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக அக்சர் படேல் காயம் அடைய, அவருடைய இடத்திற்கு ஒரே நாளில் சிறந்த மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டு வர முடிந்தது.

- Advertisement -

அடுத்து ஆசியக் கோப்பையை வென்று, ஆஸ்திரேலியா தொடரை சந்திக்கும் பொழுது, அந்தத் தொடரை அக்சர் படேல் இடத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டு வந்து பரிசோதிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

இப்படி அந்தந்த சூழ்நிலைக்கு தேவையான வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் வளையத்திற்குள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். தற்பொழுது ரிசர்வ் வேகப்பந்துவீச்சாளராக உலகக் கோப்பை இந்திய அணியில் தொடரக்கூடிய பிரசித் கிருஷ்ணா மிக அருமையான ஃபார்மில் இருக்கிறார்.

இப்படியான காரணங்களால் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் இந்திய அணி முதன்மை இடத்தில் இருப்பதாக பல முன்னாள் வீரர்களும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றி வாய்ப்பு குறித்து பேசி உள்ள, பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சயித் அன்வர் கூறும் பொழுது “இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் சீன் அப்பாட் விளையாடிய அந்த இன்னிங்ஸ் அருமையாகவும் பயங்கரமாகவும் இருந்தது.

உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிற அணிகளில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று என்னால் சுருக்கமாகச் சொல்ல முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள சிறிய மைதானங்கள் மற்றும் இந்திய அணியின் இறுதிக்கட்ட பந்துவீச்சு, இந்த இரண்டும் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதைத் தடுக்கக்கூடிய காரணிகளாக இருக்கும்!” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!