இந்தியாகிட்ட இருக்கிறது வெறும் பேருதான்; இந்தியாவுக்கு இந்தியாவுல சம்பவம் இருக்கு – பாகிஸ்தான் வீரரின் வெளிப்படையான சவால்!

0
612
Odiwc2023

இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி துவங்குவது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்திதான். கடந்த மாதத்தில் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை பட்டியலை ஐசிசி வெளியிட்டு இருந்தது.

இந்தப் பட்டியலில் சமீபத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மிகக்குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15 ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக் கொள்வதாக இருந்தது. தற்பொழுது இந்த போட்டி ஒருநாளுக்கு முன்பாக அக்டோபர் 14ஆம் தேதி நடக்கிறது!

- Advertisement -

ஒரு வழியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த மைதானத்தில் எந்த தேதியில் மோதிக் கொள்கின்றன என்பதற்கான தெளிவான பதில் வந்துவிட்டது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலகின் பிறப்பகுதிகளில் மோதினாலே அந்தப் போட்டி உலகின் எந்த நாடுகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இருக்கும் மதிப்பை விட மிகப்பெரிய மதிப்பை வணிக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் கொண்டிருக்கும்.

தற்பொழுது உலக கோப்பையில் அதுவும் இந்தியாவில் இரண்டு அணிகளும் மோதிக் கொள்கின்றன எனும் பொழுது, ரசிகர்களின் உள்ளத்தில் எரியும் எதிர்பார்ப்பு நெருப்பு எக்கச்சக்க அளவில் இருக்கிறது. மேலும் அந்த நெருப்பு முன்னால் வீரர்களையும் விட்டு வைக்காமல் பற்றிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகூப் ஜாவித் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி குறித்தும், இரு அணிகளின் பலங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“பாகிஸ்தான் அணியை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் வீரர்களின் திறமை மற்றும் வீரர்களின் வயது வரை சராசரியாக சமநிலையில் இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் நிறைய பெரிய பெயர்களைக் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் உடல் தகுதி மற்றும் பார்ம் என்று யோசிக்கும் பொழுது, அதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. மேலும் அவர்கள் புதிய வீரர்களை கண்டறிந்து புதிய கலவையை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த காரணங்களினால் இந்த முறை உலக கோப்பையில் இந்தியாவை இந்தியாவில் வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஜமான் கானுக்கு நிறைய திறமை இருக்கிறது. அவர் இறுதிக்கட்ட ஓவர்களில் மிகவும் சிறப்பாக இருக்கிறார். விளையாடும் அணியில் நசீம் ஷாவுக்கு தரும் முன்னுரிமை விட இவருக்கே முன்னுரிமை தர வேண்டும். ஷாகின் மற்றும் ஹாரிஸ் இருவருடன் இணைந்து இவர் இருக்க வேண்டும். இதற்கு அடுத்து தேவை என்றால் நசீம் வரலாம்!” என்று கூறியிருக்கிறார்!