“இந்தியாவுக்கு இந்த வீரர் மட்டும் இல்லனா டீம் ஒன்னுமே கிடையாது!” – மைக்கேல் வாகன் பரபரப்பு பேச்சு!

0
5025
ICT

இந்திய அணி இந்த ஆண்டு ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக மிகவும் பலவீனமாக கணிக்கப்பட்ட ஒரு அணியாகவே இருந்தது.

ஏனென்றால் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரர்கள் நான்கு பேர் காயத்தால் பாதிக்கப்பட்டு அணிக்கு வெளியே தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மறுவாழ்வில் இருந்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய உலகக்கோப்பை அணியில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்த தெளிவே இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக இந்திய அணியில் யார் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்கின்ற தெளிவும் இல்லை.

எனவே இந்திய அணி செட்டில் செய்யப்படாத அணியாக இருந்த காரணத்தினால், உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றாலும் கூட, புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முதலில் வந்தால் போதும் என்கின்ற நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் காயத்தில் இருந்து இந்திய முன்னணி நட்சத்திர வீரர்கள் அனைவரும் திரும்பி ஒரே அணியாக சேர்ந்த பொழுது, வெறும் 50 ரன்களில் இலங்கை அணியை சுருட்டி ஆசியக் கோப்பையை கைப்பற்றி வந்தார்கள்.

- Advertisement -

அங்கு ஆரம்பித்த இந்திய அணியின் அசுர வேகம் அப்படியே உலகக்கோப்பையில் இப்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. நடப்பு உலக கோப்பையில் இந்திய அணி தற்போது விளையாடி உள்ள 10 போட்டிகளையும் வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.

இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக கொடுக்கும் துவக்கம் மிகப்பெரிய அளவில் இந்திய பேட்டிங் யூனிட்டுக்கு பலனளிக்கக் கூடியதாக இருக்கிறது. பின்பு வரும் இந்திய பேட்ஸ்மேன்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி விளையாடுவதற்கு ரோகித் கொடுக்கும் அதிரடி துவக்கம் அடிப்படையாக இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் “உலகக்கோப்பையில் எனது வீரர் என்று சொல்லும் அளவுக்கு நான் ரோகித் சர்மாவிடம் செல்வேன். ரோகித் இல்லாமல் இந்திய அணிக்கு இப்பொழுது நடந்ததெல்லாம் நடந்து இருக்காது. அவர் இந்த அணுகு முறையில் விளையாடாமல் இருந்திருந்தால் அவ்வளவு சிறப்பாக எல்லாம் அமைந்திருக்காது என்று நான் நம்புகிறேன்.

விராட் கோலி அற்புதமான பார்மில் இருக்கிறார். அவர் 50 சதங்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்தது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு அற்புதமான வீரராக திடீரென மாறிவிட்டார்!” என்று கூறியிருக்கிறார்.