” டோன்ட் வொரிப்பா.. இந்தியாவுக்கு பேட்டிங்கில் நம்பர் 4 இடம் ஒரு பிரச்சினையே கிடையாது” – அதிரவைத்த ஆஸி பிராட் ஹாக்!

0
1103
Hogg

கடந்த வருடத்திலிருந்து இந்திய வெள்ளைப்பந்து அணியின் முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாக காயமடைந்து வருவது, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில் இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரிய பின்னடைவுகளை உருவாக்கி வருகிறது!

தற்பொழுது இந்திய அணியில்பேட்டிங்கில் நான்காம் இடத்திற்கும், இரண்டாவது விக்கெட் கீப்பருக்கும் தேடுதல் நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வில் சஞ்சு சாம்சன், சூரியகுமார், திலக் வர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணிக்கான முதன்மை விக்கெட் கீப்பராக தற்போது இருக்கும் கே எல் ராகுல் மற்றும் இந்திய அணியின் நான்காவது இடத்திற்கான பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயத்திலிருந்து மீண்டு வருவார்களா? வந்தால் உடனே வாய்ப்பை பெறுவார்களா? என்பதெல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு இந்த பிரச்சனைகள் தீர வழி இருக்கிறதா? அல்லது இந்திய அணிக்கு உண்மையாலுமே இந்த பிரச்சனைகள் பெரிய தலைவலியாக மாறுமா? என்பது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “இந்திய அணி நிர்வாகம் விக்கெட் கீப்பர் இசான் கிசானை துவக்க இடத்திற்கான வீரராகவே பார்க்கிறது. அவர் கீழ் வரிசையில் வந்து விளையாடக் கூடியவர் கிடையாது. எனவே அவர் மேல் வரிசையில் விளையாட முடியும் என்றால் கில்லுக்கு பதிலாக இருக்கலாம். கே எல் ராகுல் விளையாடும் உடல் தகுதி இல்லை என்றால், இவருக்கு அணியில் முக்கிய இடம் இருக்கும்.

- Advertisement -

அதே சமயத்தில் கில் மற்றும் ரோஹித் சர்மா துவங்கினால் நான்காவது இடத்தில் சஞ்சு சாம்சன் தாராளமாக இருக்கலாம். அந்த இடத்தில் அவரால் அணிக்கு தேவைப்படுவதை தர முடியும் என்று நான் நம்புகிறேன்.

இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தால், ஒரு விக்கெட் கீப்பர் அணியில் இடம் பெற்று விடுகின்ற காரணத்தினால், நான்காவது இடத்தை திலக் வர்மாவுக்கு கொடுக்கலாம். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் விளையாடியது கிடையாது. ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. எனவே அந்த இடத்திற்கு அவரும் பொருந்துவார்!” என்று கூறி இருக்கிறார்!