தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி.. பும்ரா இனி எப்போது இந்திய அணிக்குள் வருவார்? – வெளியான ரிப்போர்ட்!

0
1515

காயத்திற்கான அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் பும்ரா உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது? மீண்டும் எப்போது இந்திய அணிக்குள் வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன? என்பது குறித்து இந்திய தேசிய அகடமி அதிகாரி ஒருவர் சமீபத்திய பேட்டிகள் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளையாடினார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

டிசம்பரில் குணமடைந்து விடுவார், ஜனவரியில் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை குணமடையவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர், நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் என பலவற்றில் பங்கேற்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது ஆசியகோப்பை மற்றும் உலகக்கோப்பைக்குள் வருவாரா? என்கிற கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய தேசிய அகடமியில் இருக்கும் அதிகாரி ஒருவர் பேசியுள்ளார்.

தற்போது பூமரா காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், தினமும் நாள் ஒன்றுக்கு ஏழு ஓவர்கள் வீதம் பந்துவீசி வருகிறார். அவ்வப்போது முழு உடற்பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தன்னுடைய முதுகுப்பகுதியில் இனி காயம் வராத அளவிற்கு சற்று கூடுதல் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய தேசிய அகடமி அதிகாரி பேசியதாவது

“மற்ற காயங்களுக்கு எளிதாக எத்தனை நாட்களுக்குள் சரியாக விடும் என்று கூறிவிடலாம். ஆனால் பும்ராவிற்கு முதுகுப்பகுதியில் இருக்கும் எலும்பில் பிரச்சனை. ஆகையால் அதற்கு எத்தனை காலம் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைந்து வரவிருக்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட வைக்க திட்டமிருக்கிறது. அதற்கு முன்பு இந்திய தேசிய அகடமில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும். அதில் பும்ராவின் உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கப்படும். அதன் பின்னரே 50 ஓவர் உலகக்கோப்பையிலும் விளையாட வைக்கலாமா? என்கிற ஆலோசனைகள் நடத்தப்படும்.” என்று கூறினார்.