“இந்தியா பேட்டிங்கில் எங்களுக்கு பாடம் நடத்தியது.. அழுத்தத்திலேயே வச்சிருந்தாங்க!” – நெதர்லாந்து கேப்டன் பேச்சு!

0
5647
Edwards

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியைக் கொடுத்து, நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதிப்பெற்றது.

அதற்கு நியாயம் செய்யும் வகையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை அபாரமான முறையில் வீழ்த்தி நம்பிக்கை அளித்தது.

- Advertisement -

மேற்கொண்டு இன்னும் ஒன்று இரண்டு வெற்றிகளை நெதர்லாந்து பெறும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களுக்கு மேற்கொண்டு வெற்றிகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் கூட நடப்பு உலகக் கோப்பை தொடரை சுவாரசியப்படுத்தியதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அடுத்து நெதர்லாந்து அணிக்கு மிக முக்கிய இடம் இருக்கிறது. இந்த இரு அணிகளுமே புள்ளி பட்டியலில் கதவுகளை கடைசிவரை திறந்து வைக்க உதவி இருந்தன.

இந்த நிலையில் இன்று லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பெங்களூர் மைதானத்தில் மோதிய போட்டியில், பந்து வீச்சில் 410 ரன்கள் விட்டுக் கொடுத்து, பேட்டிங்கில் 250 ரன்கள் மட்டுமே எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து தோல்வி அடைந்தது. ஆனாலுமே அவர்கள் இந்த உலகக் கோப்பையில் இருந்து சில நல்ல பாடங்களை கற்று எடுத்துச் செல்கிறார்கள்.

- Advertisement -

தோல்விக்கு பின் பேசிய நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் கூறும் பொழுது “நாங்கள் இரண்டு நல்ல கிரிக்கெட் கேம் விலை விளையாடினோம். ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் விரும்பிய இடத்தில் இருக்கிறோமா என்றால் இல்லை. நாங்கள் விளையாடும் பாணியில் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். தொடருக்கு வரும் பொழுது இது கடினமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது அவர்கள் மிக நல்ல அணியாக இருக்கிறார்கள். அடுத்து டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

இந்தியா பேட்டிங்கில் அவர்களுடைய கிளாசை காட்டினார்கள். அதில் கற்றுக்கொள்ள எங்களுக்கு நிறைய இருக்கிறது. அவர்கள் எங்களை அழுத்தத்திலேயே ஊற வைத்திருந்தார்கள்.

கடைசிப் பத்து ஓவர்கள் இருக்கும் பொழுது, மூன்று விக்கெட்டுகள்தான் விழுந்திருக்கும் பொழுது, மேலும் அப்படியான நிலையில் இருந்து இந்தியா பெரிய ரன்களை அடிக்கப் போகிறது என்று தெரியும். இந்தத் தொடரில் தோற்கடிக்க இந்தியா மிகவும் கடினமான ஒரு அணி.

நாங்கள் இளம் அணியாக இருக்கிறோம். உங்கள் அணியில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். இது எங்களுக்கான வளர்ச்சியை பற்றியது. எங்களுக்கு சில பயிற்சி முகாம்கள் இருக்கின்றன. எப்போது என்ன தேதியில் என்பது குறித்து தெரியவில்லை!” என்று கூறியிருக்கிறார்!