இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்..எந்த சேனலில் பார்க்கலாம்? போட்டி அட்டவணை.. முழு தகவல்கள்

0
337
ICT

இந்தியா தரப்பில் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் இருவரும் நடைபெற இருக்கும் இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்கள். இதில் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்டில் இருந்து மட்டும் விலகி இருக்க, மற்றவர் ஐந்து டெஸ்ட் கொண்ட முழு தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார்.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகின்ற 24-ஆம் தேதி துவங்குகிறது. இறுதிப்போட்டி மார்ச் மாதம் 7ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது.

- Advertisement -

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான அட்டவணை:

முதல் டெஸ்ட்: வியாழன், 25 ஜனவரி 2024, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் (காலை 9:30 ).

2வது டெஸ்ட்: வெள்ளிக்கிழமை, 02 பிப்ரவரி 2024, டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில், விசாகப்பட்டினத்தில் (காலை 9:30 IST).

- Advertisement -

3வது டெஸ்ட்: வியாழன், 15 பிப்ரவரி 2024, சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில், ராஜ்கோட்டில் (காலை 9:30).

4வது டெஸ்ட்: வெள்ளிக்கிழமை, 23 பிப்ரவரி 2024 ஜார்க்கண்ட் இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ், ராஞ்சியில் (காலை 9:30 ).

5வது டெஸ்ட்: வியாழன், 7 மார்ச் 2024 இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில், தர்மசாலா (காலை 9:30 ).

மேலும் நடக்க இருக்கும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆன்லைனில் ஜியோ சினிமா அப்ளிகேஷனில் பார்க்கலாம். இது இலவசமாகக் கிடைக்கிறது.

இதே போல் இந்த டெஸ்ட் தொடரை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் பார்க்கலாம். இந்த டெஸ்ட் தொடருக்கு தமிழில் கிரிக்கெட் வர்ணனை கிடைக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணிகள் விபரம்:

இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், ஸ்ரீகர் பாரத், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆவேஸ் கான்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஜோ ரூட், ஜாக் க்ராலி, பென் ஸ்டோக்ஸ், ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ரெஹான் அகமது, ஜானி பேர்ஸ்டோ, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், ஒல்லி போப், கஸ் அட்கின்சன், மார்க் வூட், டான் லாரன்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜாக் லீச்.