“இந்தியா இதை மட்டும் மாத்திக்காதிங்க.. அப்புறம் எல்லா தப்பா போயிடும்!” – லெஜெண்ட் ரிச்சர்ட்ஸ் அறிவுரை!

0
2207
ICT

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நம்ப முடியாத வகையில் செயல்பட்டு ஒட்டுமொத்த தொடரையும் சுவாரசியமாக மாற்றிய பெருமை ஆப்கானிஸ்தான் அணிக்கு உண்டு.

அந்த அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதற்கு அடுத்து பேட்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய அணியிடம் பந்துவீச்சில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து தவறுகளை திருத்திக் கொண்டு வந்த ஆப்கானிஸ்தான் அணி எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. டெல்லியில் வைத்து இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், அதற்கு அடுத்து சென்னையில் பாகிஸ்தானையும், இலங்கையையும் வீழ்த்தி அட்டகாசப்படுத்தியது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஒன்பது லீக் ஆட்டங்களில் நான்கு பெரிய வெற்றிகளை பெற்று, தங்கள் நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களையும் மற்றும் பொதுமக்களையும் பெரிய அளவில் மகிழ்வித்து நாடு திரும்பி இருக்கிறது.

நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்த பொழுதும் கூட, அந்த அணியின் இளம் மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அஸ்மத் ஓமர்ஸாய் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 97 ரன்கள் எடுத்து, அணியை 244 ரன்கள் என்கின்ற கௌரவமான நிலைக்கு கூட்டிச் சென்றார். உலகக் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு எப்பொழுதும் தேவையும் மரியாதையும் இருந்தே வருகிறது.

- Advertisement -

இவர் குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் கூறும் பொழுது “நிறைய இளம் கிரிக்கெட் திறமைகள் இங்கு இருக்கிறது. ஆனால் அஸ்மத் போன்ற திறமை நம்ப முடியாதது. அவர் மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர். அவரிடம் தொழில் தர்மம் இருக்கிறது. அவர் இப்படி இருப்பதால் ஒரு பயிற்சியாளராக என்னுடைய வேலை மிகவும் எளிதாகிறது.

நான் அஸ்மத்தை பொறுத்தவரை ஒரு வருடங்களுக்கு மேலாக பார்த்து வருகிறேன். எப்பொழுதும் அவர் பந்தை டைம் செய்யும் விதத்தில் நான் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கூட மூன்றாவது நான்காவது பந்தில் மிட்சல் ஸ்டார்க்கை அவரது தலைக்கு மேல் தூக்கி அடித்தார். நேற்றும் இதே போல் மிட் ஆஃப் திசையில் பந்தை நேராக தூக்கி அடித்தார்.

பந்து அவரது பேட்டில் படுகின்ற பொழுது எழுகின்ற சத்தமே, அவர் பந்தை எவ்வளவு அற்புதமாக டைம் செய்கிறார் என்பதை காட்டும். இவர் ஆப்கானிஸ்தானுக்கு அற்புதமான ஒரு வீரராக உருவாகி வருகிறார். இவரது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!