இந்திய உள்நாட்டு மூன்று தொடர்புகளுக்கும் குழுக்கள் அறிவிப்பு!

0
111
Bcci

மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் இந்தியாவில் உள்நாட்டு தொடர்கள் நடத்தப்படுகிறது. இதில் டெஸ்ட் போட்டித் தொடராக நடத்தப்படும் ரஞ்சி டிராபி தொடர்தான் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு என்றே கூறலாம். இதையடுத்து ஒருநாள் ஒருநாள் கிரிக்கெட்டுக்காக விஜய் ஹசாரே டிராபி நடத்தப்படுகிறது. டி20 போட்டிக்காக சையது முஷ்டாக் அலி டிராபி நடத்தப்படுகிறது.

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியாவில் நடத்தப்படும் மூன்று வடிவ கிரிக்கெட்டிற்குமான சையது முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, இரஞ்சி டிராபி என மூன்று தொடர்களுக்கும் அணிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் முப்பத்தி எட்டு அணிகளை மூன்று வடிவ கிரிக்கெட் தொடருக்கும் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20

இந்தத் தொடரில் தமிழ்நாடு அணி குரூப் இ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, சிக்கிம், பெங்கால் என தமிழ்நாடு அணியோடு 6 அணிகள் இடம்பெற்றுள்ளன.

விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர்

- Advertisement -

இந்தத் தொடரில் தமிழ்நாடு அணி குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, பீகார், அருணாச்சல், பிரதேஷ் என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

ரஞ்சி ட்ராபி டெஸ்ட் தொடர்

இந்தத் தொடரில் தமிழ்நாடு அணி எலைட் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் மும்பை, சௌராஷ்டிரா, ஆந்திரா, ஹைதராபாத், மகாராஷ்டிரா, அசாம், டிடிசிஏ என தமிழ்நாடு அணியோடு மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் முப்பத்தி எட்டு அணிகளும் பிரிக்கப்பட்டுள்ள முழு குழு விவரங்கள் அடங்கியுள்ள ட்வீட்டர் லிங்க் கீழே உள்ளது.