பாகிஸ்தானை பார்த்தும் இந்தியா திருந்தல.. இந்தப் பையனை ஏன் எடுக்கல? – இந்திய முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் சரமாரி கேள்வி!

0
4796
Shaheen

இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு தற்பொழுது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருவது, இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள்தான். இவர்கள் பந்தை உள்ளே கொண்டு வந்தாலும் சரி, வெளியே கொண்டு சென்றாலும் சரி, இந்திய பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை!

எதிர் அணிகளில் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. போட்டி நடப்பது இந்திய மண்ணில் என்றாலுமே அவர்கள் பிரச்சனையாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி எதிர் அணியில் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பது பிரச்சனையென்றால், சொந்த அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய பிரச்சினையாக நீண்ட காலமாக இருக்கிறது.

இறுதியாக இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான இடதுகை வேகப்பந்துவீச்சாளராக ஜாகிர் கான் இருந்தார். அவருடன் சேர்ந்து அவருக்கு முன்பாக ஓய்வு பெற்ற ஆசிஸ் நெக்ரா இருந்தார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதில் இவர்களுடைய பங்களிப்பு பெரியது!

இவர்களுக்கு அடுத்து எடுத்துக் கொண்டால், பெரிய அளவில் இந்திய அணியில் நிரந்தரமான இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் வரவும் இல்லை; யாரையும் உருவாக்கவும் இல்லை.

- Advertisement -

இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவதற்குச் சொல்லப்படுகிற காரணம், இடது lகை வேகப்பந்துவீச்சாளர்களை அதிகம் சந்தித்து விளையாடாததுதான் என்று சொல்கிறார்கள். அதே சமயத்தில் சொந்த அணியில் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து, இவர்களும் பயிற்சி பெறுவது கிடையாது; எதிரணியையும் அச்சுறுத்துவது கிடையாது.

தற்பொழுது இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும் பொழுது “எங்களுடைய காலத்தில் நாங்கள் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்டுவர முயற்சி செய்தோம். நாங்கள் எப்போதும் அப்படியான ஒரு பந்துவீச்சாளரை விரும்புகிறோம். இதற்கு அர்ஸ்தீப் சிங் நிறைய நம்பிக்கை அளிக்கக் கூடியவராக இருந்தார்.

ஆனால் தற்பொழுது அவர் ஏன் அணியில் இல்லை என்று புரியவில்லை. என்னை பொருத்தவரை அவர் ஒரு இன்ட்ரஸ்டிங்கான தேர்வு. அவர் யார்கர்களை வீசும் திறன் கொண்டவர். அதேசமயத்தில் பந்தை லேட்டாக மூவ் செய்யக் கூடியவர். அவர் ஒரு அற்புதமான வேகப்பந்துவீச்சாளர். அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? என்று பார்த்தால், எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது!” என்று வருத்தமாக கூறியிருக்கிறார்!