இந்திய கிரிக்கெட்

156 ரன் நாட் அவுட்.. கில் ஜெய்ஸ்வால் நங்கூர பேட்டிங்.. இந்தியா தொடரை கைப்பற்றியது.. ஜிம்பாப்வே அணி தோல்வி

இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடி பேட்டிங்கில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முதல்முறையாக துஷார் தேஷ்பாண்டே அறிமுகமானார். இந்த தொடரில் இந்த போட்டியில் எதிர்பார்த்ததை விட ஜிம்பாப்வே அணி பேட்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

ஜிம்பாப்வே அணி முதல் விக்கட்டுக்கு 52 பந்துகளில் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் மாதவேரே 24 பந்தில் 25 ரன்கள், மருமாணி 31 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் சிக்கந்தர் ராசா சிறப்பாக விளையாடி 28 பந்தில் 46 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பந்து வீசி தரப்பில் வேகப்பந்து வீ ச்சாளர் கலீல் அகமது இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மேலும் அபிஷேக் ஷர்மா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தங்களின் முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஜோடி கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். சிறப்பாக விளையாடிய ஜேசுவால் 29 பந்துகளில் 9 பவுண்டரிகள் உடன் அரைசதமடித்தார். இந்த ஜோடி நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது.

இதையும் படிங்க : 2வது டெஸ்ட்.. ஆண்டர்சனின் மாற்றுவீரரை அறிவித்த இங்கிலாந்து.. முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு அடித்த லக்

மேலும் இந்த ஜோடி இறுதிவரை விக்கெட்டை கொடுக்காமல் 15.2 ஓவரில் 156 ரன்கள் நாட் அவுட் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்தார்கள். நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டை வென்று இருந்த இந்திய அணி இந்த போட்டியை வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் முதல்முறையாக வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது முறையும் அதே அணிக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts