வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி 18ம் தேதி நாட்டிங்காமில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியோடு இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றதை அடுத்து அதற்கு பதிலாக முன்னாள் சிஎஸ்கே வீரரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.
2003ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தனது அற்புதமான ஸ்விங் பந்துவீச்சு மூலம் எப்படிப்பட்ட முன்னணி பேட்ஸ்மேனை வீழ்த்தி விடும் திறமை இவருக்கு உண்டு. இந்தியாவின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி கூட இவரது பந்துவீச்சுக்கு அதிக முறை டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழந்திருக்கிறார்.
ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தற்போது 41 வயதாகி வரும் நிலையில் டெஸ்டில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்றும், அதற்குப் பிறகு தான் ஓய்வு பெற்று விடுவதாக அறிவித்திருந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து பிரியா விடை பெற்றார். இதுவரை 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 டிக்கெட்டுகள் வீழ்த்தியதோடு இவரது டெஸ்ட் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரது இடத்திற்கு மாற்று வேகப் பந்துவீச்சாளரை கொண்டுவரும் முனைப்பாக மார்க வுட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இனி வரவுள்ள அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் மார்க் வுட் செயல்படுவார் என்று தெரிகிறது.
தற்போது 34 வயதாகி வரும் மார்க் வுட் 2019ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்ட மார்க் வுட் இதுவரை மொத்தமாக 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதையும் படிங்க:சிஎஸ்கே அனுபவம் இந்திய அணியில் உதவுமா?.. சின்ன வயசு கனவு நனவாகி இருக்கு – துஷார் தேஷ்பாண்டே பேட்டி
மேலும் 66 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளையும், 34 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். கிளப் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 75 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 244 விக்கெட்டுகளும், 100 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 123 விக்கெட்டுகளும், 59 உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.