“இந்தியா நாக்-அவுட்ல ஜெயிக்க இத பண்ணா மட்டும்தான் முடியும்.. கத்துக்கலான கஷ்டம்!” – கம்பீர் அதிரடி அட்வைஸ்!

0
3745
Gambhir

இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை நெதர்லாந்து அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் விளையாடுகிறது. ஏற்கனவே விளையாடிய எட்டு லீக் போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று அசத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த காரணத்தினால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு அந்த இடத்திலேயே முடிந்துவிட்டது.

- Advertisement -

எனவே இதன் காரணமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் வருகின்ற 15ஆம் தேதி அரையிறுதியில் மோதுவது உறுதியாக இருக்கிறது. தற்பொழுது பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது.

2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபியை வென்ற பிறகு இந்தியா எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லவில்லை. நாக் அவுட் சுற்றுகளில் இந்தியா தோல்வியடைவது தொடர்கதையாக இருந்து வருகிறது. நாட் அவுட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு தன்னுடைய ஆலோசனையை கம்பீர் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “நான் 2011 ஆம் ஆண்டு விளையாடிய உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்னிங்ஸ் பற்றி இப்பொழுது பேசப்படுகிறது. அது தேவையில்லாத ஒன்று. அது முடிந்துவிட்டது, அதை தூசுத்தட்ட வேண்டாம். 2015 மற்றும் 2019 மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என தொடர்ச்சியாக நாட் அவுட் போட்டிகளில் தோற்று, தைரியமாக இருப்பது முக்கியம் என இந்திய அணியினர் கற்று இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

- Advertisement -

பாசிட்டிவ் கிரிக்கெட் விளையாடுவது அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் வெல்வதற்கான மிகச் சிறந்த வழி. நடுவில் நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள் விஷயம் சரியாகிவிடும்.

அதேசமயத்தில் இந்திய அணி மீண்டும் நாக் அவுட் சுற்றில் தோற்கும் என்றால் அதற்காகத் தேவையில்லாமல் அணியினரை விமர்சிக்க வேண்டாம். உண்மையில் தோல்வி அவர்களைத்தான் அதிகபட்ச ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கும்.

ரசிகர்களுக்கு மற்றும் விமர்சிகர்களுக்கு சோகம் இருக்கலாம். ஆனால் அணியில் இருக்கும் 15 முதல் 20 பேருக்கு இருக்கும் ஏமாற்றம் வேறு யாருக்குமே இருக்காது. மேலும் இந்த தோல்வியால் உலகம் ஒன்றும் அழிந்து போய் விடுவதில்லை. மீண்டும் சூரியன் வருவது போல இறுதி போட்டிகள் வந்து கொண்டுதான் இருக்கும்!” என கூறியிருக்கிறார்!