இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா போட்டியின் இறுதியில் காயம் அடைந்து வெளியேறினார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்கல் பும்ராவின் காயம் குறித்து சில முக்கிய தகவலை கூறி இருக்கிறார்.
காயமடைந்த இந்திய பவுலர் பும்ரா
இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் துருப்புச் சீட்டு பந்துவீச்சாளராக இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு முதல் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியும் பெற்றுக் கொடுத்தார்.
இந்த சூழ்நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் 180 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் குவித்தது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸில் 81வது ஓவரின் போது காயமடைந்த பும்ரா போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் தற்போது பும்ரா நலமாக இருக்கிறார் எனவும், காயம் குறித்து கவலை அடைய வேண்டியது இல்லை எனவும் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறியிருக்கிறார்.
பவுலிங் கோச் கொடுத்த அப்டேட்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா இப்போது நன்றாக இருக்கிறார், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவருக்கு நிகழ்ந்தது சாதாரண தசை பிடிப்புதான். இதனால்தான் அதற்குப் பிறகு பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். எனவே அவர் குறித்து எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை அவர் நன்றாக இருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:அவசர பட்டுட்டியே தம்பி.. டிராவிஸ் ஹெட்ட முறைச்சு இங்க நீ மாட்டிக்கிட்ட – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் பும்ரா 23 ஓவர்கள் வீசி 61 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் மீதம் இருப்பதால் இவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனவே இவரது உடல் தகுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த விதமான ரிஸ்க் எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.