மனுஷன் எப்படி இதை செய்றார்னு தெரியல.. நானே பிரமித்து போறேன்.. பும்ராவை கண்டு மிரளும் இந்திய பௌலிங் கோச்

0
159

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது வருகிற 20-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பும்ராவின் குறிப்பிட்ட பந்து வீசும் திறனை பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி அதிக அளவிலான இளம் வீரர்களை கொண்டிருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக பும்ரா இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராக இருப்பது இந்திய அணிக்கு பெரிய உதவேகத்தை அளித்துள்ளது. கடைசியாக பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறினார். தற்போது அவர் காயம் முழுமையாக குணமடைந்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கும் நிலையில் அவரை இந்திய அணி குறிப்பிட்ட போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அவரைப் பார்த்து பிரமித்தேன்

மேலும் பந்துவீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற திறமையான வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பவுலிங் கோச் மோர்னே மோர்கல் பும்ரா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு மகிழ்ச்சியான விஷயமாகும் என்று சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:இங்கிலாந்து நோக்கி படை எடுக்கும் இந்திய ஸ்டார் வீரர்கள்.. ருதுராஜை தொடர்ந்து மும்பை வீரருக்கும் அழைப்பு

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ராவுக்கு எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்வது என்கிற விஷயம் நன்றாகவே தெரியும். கடந்த மூன்று நாட்களாக வலை பயிற்சியில் அவர் பந்து வீசும் ஆற்றலை பார்த்து நான் பிரமித்துப் போனேன். தற்போது அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதை வைத்து நாங்கள் சமாளிப்போம். அவர் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர் என்பதால் நாங்கள் அவருடன் புத்திசாலித்தனமான முறையில் இருப்போம். முதல் மூன்று வலைப்பயிற்சிகளைப் பொறுத்தவரை டியூக்ஸ் பந்தில் அவர் பந்து வீசுவதை பார்த்து உற்சாகமான நிலையில் இருக்கிறேன்” என அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -