இங்கிலாந்து நோக்கி படை எடுக்கும் இந்திய ஸ்டார் வீரர்கள்.. ருதுராஜை தொடர்ந்து மும்பை வீரருக்கும் அழைப்பு

0
521

இந்திய பேட்ஸ்மேன் திலக் வர்மா, தற்போது நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாடவுள்ளார். 22 வயதான இவர், இந்திய அணிக்காக இதுவரை 4 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவரை ஹாம்ப்ஷையர் அணி கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் தொடரில் விளையாட அணுகியுள்ளது.
திலக் வர்மாவின் கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2024 செப்டம்பர் 19 முதல் 22 வரை அனந்தபூரில் நடைபெற்ற துலீப் கோப்பையில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா A அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

ஹாம்ப்ஷையர் அணியில் திலக் வர்மா:

இது தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,”திலக் வர்மாவை இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் லீக்கில் விளையாட ஹாம்ப்ஷையர் அணி அணுகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அவருக்கு ஹாம்ப்ஷையர் அணியுடன் சிறப்பான பயணத்தை வாழ்த்துகிறது,” என்று தெரிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் 2025இல் கடைசியாக களமிறங்கிய திலக் வர்மா, இதுவரை 18 முதல் தர போட்டிகளில் விளையாடி, 5 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 1204 ரன்கள் குவித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 50.16 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

திலக் வர்மா டெஸ்ட் ரெடககார்ட்:

சிறந்த ஃபீல்டரான திலக், ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளராகவும் திறமையானவர். அவர் 8 விக்கெட்டுகளை 12.87 சராசரி மற்றும் 24.10 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஹாம்ப்ஷையர் அணி, தற்போதைய கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது, மேலும் 3 போட்டிகளை டிரா செய்து, 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலிக்கு கேப்டன் பதவி தந்திருக்கனும்.. சரியாக கையாளவில்லை.. ரவி சாஸ்திரி கருத்து

ஹாம்ப்ஷையர் அணி, கடந்த மே 23 முதல் 26 வரை ரோஸ் பவுலில் நடைபெற்ற கடைசி போட்டியில், அட்டவணையில் முதலிடத்தில் உள்ள சசெக்ஸ் அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பென் பிரவுன் தலைமையிலான ஹாம்ப்ஷையர் அணியின் அடுத்த டெஸ்ட் ஜூன் 22 முதல் 25 வரை செல்ம்ஸ்ஃபோர்டில் உள்ள கவுண்டி மைதானத்தில் எசெக்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது. இதில் திலக் வர்மா பங்கேற்க உள்ளார். இந்த தொடரில் விளையாடுவதன் மூலம் திலக் வர்மாவின் பேட்டிங் யுக்தி மெருகேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -