224/2 to 319 ஆல் அவுட்.. சீறி எழுந்து சிராஜ்.. அடங்கி ஒடுங்கிய இங்கிலாந்து பாஸ்பால்

0
433
Siraj

நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாமல், மூன்றாவது டெஸ்டின் மூன்றாவது நாளில் அதிரடியான இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி களம் இறங்கியது.

நேற்று 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட் மட்டும் இழந்திருந்த இங்கிலாந்து அணிகு இன்று பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் நல்ல முன்னிலையை பெறுவதற்கு பேட்டிங் செய்ய வந்தார்கள்.

- Advertisement -

முதல் சிசன்னில் பும்ராவும் குல்தீப்பும் மிகச் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்துக்கு பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்கள். ஜோ ரூட் 18, ஜானி பேர்ஸ்டோ 0, பென் டக்கெட் 153 என வெளியேறினார்கள்.

மூன்றாவது நாளின் மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் கேப்டன் ஸ்டோக்ஸ் நிலையாக நின்று இருந்தார்.

இந்த நிலையில் மேற்கொண்டு மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்று 224 ரன்னுக்கு மூன்றாவது விக்கெட்டை பறிகொடுத்த இங்கிலாந்து, அங்கிருந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது. கேப்டன் ஸ்டோக்சை ஜடேஜா வெளியேற்ற அங்கிருந்து சரிவு பெரிதானது.

- Advertisement -

இதற்கு அடுத்து கடைசி கட்ட பேட்ஸ்மேன்களை வெளியேற்றுவதில் சிராஜ் மிக சிறப்பாக செயல்பட்டார். பொறுமையாக ரன்கள் கொண்டு வருவதில் சிறப்பானவரான பென் ஃபோக்ஸ், ரேகான் அகமத் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் என மூவரையும் உடனுக்குடன் வெளியேற்றினார்.

இதையும் படிங்க : இன்று இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவது ஏன்?.. பிசிசிஐ விளக்கம்

வழக்கமாக கடைசி கட்ட பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் தருவதை வழக்கமாக வைத்திருக்கும் இந்திய அணி இந்த முறை அந்த தவறை செய்யவில்லை. முகமது சிராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்பொழுது அதிரடியாக இந்த போட்டியில் இந்திய அணி முன்னிலைக்கு வந்திருக்கிறது.