30 ரன்னுக்கு 9 விக்கெட்.. வழக்கம்போல் சரிந்த இலங்கை.. பராக்கை வைத்து சூர்யா மேஜிக்.. இந்திய அணி வெற்றி

0
1190
Surya

இன்று இந்தியா இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடின. இந்த போட்டியில் வெல்வதற்கான பெரிய இலங்கை அணி ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் அப்படியே சரிந்து இந்திய அணியிடம் தோற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு பவர் பிளேவில் 74 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் 16 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்த அடுத்த பந்தில் ஜெய்ஸ்வால் 21 பந்தில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்கள், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்கள். கடைசியில் அக்சர் படேல் ஆட்டம் இழக்காமல் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. மதிஷா பதிரனா நான்கு ஓவர்களில் 40 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி முதல் விக்கெட்டுக்கு 52 பந்துகளில் 84 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 48 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து வந்த குசால் பெரேரா 14 பந்தில் 20, கேப்டன் சரித் அசலங்கா 0, டசன் சனகா 0, வனிந்து ஹசரங்கா 2, கமிந்து மெண்டிஸ் 12 என முன்னணி பேட்ஸ்மேன் அனைவரும் வெளியேறினார்கள். 140 ரன்கள் ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கையில், அடுத்து 30 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

இதையும் படிங்க : IND vs SL: ஒரே ஓவரில் 2 கைகளில் பந்து வீசிய இலங்கை கமிந்து மென்டிஸ்.. ஐசிசி விதி கூறுவது என்ன.?

இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சர் படேல் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பம் தந்தார். இதற்கு அடுத்து அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து 17வது ஓவருக்கு கேப்டன் சூரியகுமார் ஆச்சரியப்படும் வகையில் ரியான் பராக்கை பந்துவீச்சுக்கு கொண்டு வந்தார். அவர் மொத்தம் 1.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்திய அணி வென்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை வென்று முன்னணியில் இருக்கிறது.

- Advertisement -