IND vs SL: ஒரே ஓவரில் 2 கைகளில் பந்து வீசிய இலங்கை கமிந்து மென்டிஸ்.. ஐசிசி விதி கூறுவது என்ன.?

0
490

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் கவனிக்கப்படக்கூடிய வீரர்களில் ஒருவராக இருக்கிறார். குறிப்பாக இரண்டு கைகளாலும் பந்து வீசும் இவரது திறமை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

25 வயதாகும் கமிந்து மெண்டிஸ் 2016ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையில் இலங்கை அணிக்காக விளையாடிய போது தனது திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது இலங்கை வாரிய லெவன் அணிக்காக விளையாடினார். அப்போது இடது கை பேட்ஸ்மேன் ஆன இயான் மோர்கனுக்கு ஆப் ஸ்பின் பந்துவீச்சும், வலது கை பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட்டிற்கு வலது கையினால் ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சையும் வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

- Advertisement -

ஆனால் இரண்டு கைகளாலும் பந்து வீசும் திறமையை ஏற்கனவே இந்தியாவின் அக்‌ஷய் கர்னேவார் சீனியர் லெவலில் இரண்டு கைகளாலும் பந்துவீசி இந்தியாவிற்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதேபோல பாகிஸ்தானின் யாசிர் ஜான் இரண்டு கைகளாலும் வீசும் திறமையை கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் பெண்கள் பிரிவிலும் மகளிர் பிக் பாஸ் தொடரில் ஜெம்மா பார்ஸ்பி பிரிஸ்பேண்ட் ஹிட் அணிக்காக விளையாடும் போது இரண்டு கைகளாலும் பந்து வீசினார்.

ஆனால் இது முதல் முறை அல்ல 1950ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஹனீப் முகமது ஒரு டெஸ்டில் இரண்டு கைகளாலும் பந்து வீசிய முதல் பந்துவீச்சாளர் என்று கூறப்படுகிறார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கிரகாம் கூச் மற்றும் இலங்கையின் ஹசன் திலகரத்னே ஆகியோரும் இதே திறமையைக் கொண்டிருக்கின்றனர். இதில் இருக்கும் நன்மை என்னவென்றால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு எந்த கையில் வேண்டுமானாலும் பந்தை மாத்தி வீசி எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும்.

- Advertisement -

ஆனால் ஒரு பந்துவீச்சாளர் அவர் விரும்பும் கையை பயன்படுத்தி பந்து வீச முடியுமா? என்பது அவ்வளவு எளிதல்ல. கிரிக்கெட் விதியின் படி ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீச வருவதற்கு முன்பாக எந்த கையால் வீசப் போகிறார் என்பதை நடுவரிடம் தெரிவிக்க வேண்டும். ஆடுகளத்தில் எந்த திசையில் பந்து வீச வருகிறார் மற்றும் எந்த கையால் வீச வருகிறார் என்பதையும் நடுவரிடம் தெரிவித்துவிட்டு அதற்கு பின்னர் பந்து வீச வேண்டும்.

ஒரு ஓவருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் தனது கைகளை மாற்றி பந்தினை வீசிக்கொள்ளலாம். இதுகுறித்து கடந்த ஆண்டு எம்சிசியில் விவாதிக்கப்பட்டது. ஆனால் பேட்ஸ்மேன் எதிர்கொள்ளும் பந்துக்கு முன்பாக இது குறித்த முழுமையான விவரம் தெரிந்து இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -