ஹாங்காங் சிக்ஸஸ்.. வெறும் 2 ரன்.. பாகிஸ்தானை வீழ்த்திய தினேஷ் கார்த்திக்கின் இந்திய அணி

0
256
Uthappa

இன்று துவங்கிய ஹாங்காங் இன்டர்நேஷனல் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் போட்டியில் வென்றது.

தற்போது ஹாங்காங்கில் நடைபெறும் இந்த தொடரில் ஒரு அணியில் ஆறு வீரர்கள் இருப்பார்கள். போட்டி மொத்தம் ஆறு ஓவர்கள் கொண்டதாக இருக்கும். இதில் ஐந்து விக்கெட் இழந்த பின்பு ஆறாவது வீரர் தனியாகவும் பேட்டிங் செய்ய முடியும். மேலும் ஒருவர் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீச முடியும்.

- Advertisement -

ராபின் உத்தப்பா அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ராபின் உத்தப்பா 11 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 3 சித்தர்கள் உடன் 28 ரன்கள் எடுத்தார்.

இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பரத் சிப்லி 12 பந்துகளில் தலா இரண்டு பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணி ஆறு ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. முகமத் சேஷாத் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

மழையால் வந்த முடிவு

இதைத்தொடர்ந்து விளையாட வந்த பாகிஸ்தான் அணிக்கு கவாஜா நஃபாய் 9 பந்துகளில் 18 ரன்கள், அப்துல் சமத் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்திருந்த பொழுது மழை வந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க : ஷிவம் துபேவ அப்படி நாம யாருமே ஏத்துக்கல.. ஆனா அவர் இன்னொருத்தர மறக்க வச்சுட்டாரு – அபிஷேக் நாயர் பாராட்டு

இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த காரணத்தினால் டக்வொர்த லீவிஸ் விதி கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் படி இறுதியாக இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -