தற்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் சிவம் துபே என்ன மாதிரியான ஒரு வேலையை செய்திருக்கிறார் என்பது குறித்து இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் சிவம் துபே பேட்டிங்கில் 18 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். மேலும் பந்துவீச்சில் கேப்டன் மிட்சல் மார்ஸ், டிம் டேவிட் என இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இவருடைய பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருந்தது.
கிடைக்காத பாராட்டு
அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ஆல் ரவுண்டராக மாறுவதற்கான பந்துவீச்சில் கொடுக்க வேண்டிய பங்களிப்பை அவர் தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறார். ஆனால் அவரை விமர்சிக்க கூடியவர்கள் அவர் சமீபத்தில் கைப்பற்றி இருக்கும் விக்கெட்டுகள் பற்றி பேசுவதில்லை. சீரான அளவில் ஆசியக் கோப்பை தொடரில் இருந்து அவர் விக்கெட் கைப்பற்றி வருகிறார்.
மேலும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாத நிலையில், ஆட்டத்தின் முதல் ஓவரையே பவர் பிளேவில் பேசினார். தற்போது ஹர்திக் பாண்டியா இல்லாத சூழலில் கூட அவர் இல்லாதது தெரியாத அளவுக்கு சிவம் துபே செயல்பட்டு இருப்பது உண்மை.
இதை யாரும் நினைப்பதில்லை
இது குறித்து பேசி இருக்கும் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியாதான் இந்தியாவுக்கு தேவையான ஆல் ரவுண்டர் என நாம் எப்பொழுதும் கூறுகிறோம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் சிவம் துபே தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை தொடர்ந்து காட்டி வருகிறார். ஹர்திக் பாண்டியா இல்லாததை நாம் யாருமே நினைக்கவில்லை. சிவம் துபே பந்து வீசி முக்கியமான கட்டங்களில் விக்கெட் வீழ்த்துகிறார். மேலும் பல இடங்களில் வந்து ரன்களும் எடுக்கிறார்”
இதையும் படிங்க : கில்லை கேலி பண்ண வெட்கமா இல்லையா.. இது என்ன மும்பையா?.. 130ல ஆல் அவுட் ஆயிருப்பீங்க – பார்த்திவ் படேல் விமர்சனம்
“இன்று போட்டியில் ஆஸ்திரேலியா மீண்டும் வேகத்தை எடுத்த பொழுது அவர் சரியான நேரத்தில் ரன்கள் எடுத்தார். அதேபோல பந்துவீச்சில் வந்து மிக முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி நிர்வாகத்தால் அவர் சவால் செய்யப்பட்ட பொழுதெல்லாம் அவர் தன்னை நிரூபித்து இருக்கிறார். அவரை ஆல் ரவுண்டர் என மற்றவர்கள் சொல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் ஒரு ஆல் ரவுண்டராக எல்லாவற்றையும் செய்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






