ஹர்திக் பாண்டியா அதிரடி அரைசதம்.. இந்திய கிரிக்கெட்டில் 2 மெகா சாதனைகள்.. யாரும் இடம் பெறாத பட்டியல்

0
306
Hardik

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் ஆண்டிக்குவா நார்த் சவுண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் வந்து அதிரடியாக இன்னிங்சை ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

இவர்களின் அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரோகித் சர்மா 11 பந்தில் 23 ரன்கள், விராட் கோலி 28 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கடுத்து சூரியகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்சர் அடித்து, அடுத்த பந்தில் எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பர் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார். ஆனால் வழக்கம்போல் தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடச் சென்று 24 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க : நான்தான் கிங்.. விராட் கோலி யாரும் செய்யாத சாதனை.. உலககோப்பை தொடரில் மெகா ரெக்கார்டு

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா 34 பந்தில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிவம் துபே 24 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதிவரை களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 27 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் தரப்பில் தன்சிம் ஹசன் ஷாகிப் 2 விக்கெட் கைப்பற்றினார்.