நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஸ் பதோனியை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து இந்திய பேட்டி பயிற்சியாளர் சிசான்சு கோடக் விளக்கம் அளித்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக மிச்சம் இருக்கும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தோம் வாஷிங்டன் சுந்தர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக வெளியேறி இருக்கிறார். அவருடைய இடத்தில் டெல்லி மாநில அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காகவும் விளையாடும் ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
தேர்வில் ஏற்பட்ட சர்ச்சை
கடந்த ஆண்டு முதலே ஒரு பகுதி நேர ஆப் ஸ்பின் பேட்டிங் ஆல் ரவுண்டர் இடத்திற்கு இந்திய அணி நிர்வாகம் ரியான் பாராக்கை முயற்சி செய்ய ஆரம்பித்து இருந்தது. அவரும் இலங்கை அணிக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களில் இடம் பெற்று இருந்தார். மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெற்று இருந்தார்.
பிறகு ரியான் பராக் காயமடைந்த காரணத்தினால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இதற்கு நடுவில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் அவரையே அந்த இடத்திற்கு வைத்துக் கொண்டார்கள். இந்த நிலையில் அவர் காயமடைந்திருப்பதால் மீண்டும் ரியான் பராக்கை கொண்டு வராமல், ஆயுஷ் பதோனியை கொண்டு வந்தது சர்ச்சையாக மாறியது.
வாய்ப்பு கொடுத்தது ஏன்?
இது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் கூறும் பொழுது ” ஆயுஸ் பதோனி உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இந்தியா அணிக்காகவும் தொடர்ந்து ரன்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் நம்மால் ஐந்து பவுலர்களை மட்டும் வைத்துக் கொண்டு போட்டிக்கு செல்ல முடியாது. அப்படி செல்லும் பொழுது வாஷிங்டன் சுந்தர் போல யாராவது காயமடைந்து இருந்தால் என்ன செய்வது? எனவே நமக்கு நடுவில் நான்கு ஐந்து ஓவர்கள் வீசுவதற்கு ஆள் தேவை. எனவே தான் நாங்கள் இந்த இளம் வீரரை தேர்வு செய்து இருக்கிறோம்”
இதையும் படிங்க : சும்மா இருங்கப்பா விராட் கோலி எதையுமே மாத்தல.. அங்க நடக்குற விஷயமே இதுதான் – அஸ்வின் தந்த விளக்கம்
“ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே ஒரு வடிவத்தில் மட்டும் விளையாடுவதால் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என மிகவும் விரும்புகிறார்கள். மேலும் அவர்களது அனுபவத்தைக் கொண்டு அடுத்து சவுத் ஆப்பிரிக்கா சென்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து விவாதித்து வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






