தற்போது அதிரடியாக விளையாடி வரும் விராட் கோலி எதையும் மாற்றவில்லை எனவும், அவர் என்ன மாதிரியான ஒரு மனநிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் தந்திருக்கிறார்.
தற்போது எப்போதும் இல்லாத அளவுக்கு விராட் கோலி அதிரடியான முறையில் பேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதல் 20 பந்துகளில் மட்டும் ஆறு பவுண்டரிகள் அடித்திருந்தார். மேலும் இதுவரையில் இல்லாத மாதிரி சிக்ஸர்கள் அடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
முன்னாள் வீரர்கள் பேச்சு
இந்திய முன்னாள் வீரர்கள் பலர் தற்போது விராட் கோலி தனது பேட்டிங் அணுகு முறையில் மாற்றங்கள் செய்திருப்பதாக கூறி வருகிறார்கள். அவர் ஏதோ புதிய அணுகு முறையில் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். விராட் கோலியின் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்தால் இதைவிட அதிரடியாக விளையாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் விராட் கோலி எந்த வகையிலும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று புதிய கருத்தை தெரிவித்திருக்கிறார். மேலும் அதற்கான காரணங்கள் குறித்தும் அவர் விளக்கி பேசி இருக்கிறார்.
எதையும் மாற்றவில்லை
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” விராட் கோலியின் மனதுக்குள் எதுவுமே ஓடிக்கொண்டே இருக்கவில்லை என்று தான் எனக்கு தெரிகிறது. விராட் கோலி என்ன மாற்றம் செய்திருக்கிறார் என்று என்னிடம் கேட்கிறீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் அவர் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. மேலும் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை”
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் அதை மோசமா பண்றாருனு தோணும்.. ஆனா அவர் கூட ஜெய்ஸ்வால் மாதிரிதான் – முகமது கைப் பேட்டி
“விராட் கோலி கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என முடிவு எடுத்திருக்கிறார். பல வருட அனுபவத்தை சேர்த்து தன்னுடைய குழந்தை பருவத்தில் விளையாடியது போல சுதந்திரமாக விளையாடுகிறார். விளையாட்டில் இருந்து சந்தோசம் கிடைக்கும் பொழுது, சரியான மனநிலையில் இருக்கும் பொழுது, இப்படித்தான் ஒருவர் விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.






