“இந்தியா மோசமா அடிச்சது.. இங்கிலாந்து டி20 விளையாடத்தான் லாயக்கு.. பாவமா இருக்கு!” – சோயப் அக்தர் கடுமையான விமர்சனம்!

0
4548
Akthar

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடப்பு உலக சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து அணி அதிர்ச்சிகரமான தோல்விகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

நேற்று இங்கிலாந்து அணி தன்னுடைய ஆறாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இங்கிலாந்து, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கொஞ்சம் சரியாகவே செயல்பட்டது. இந்திய அணியை 229 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

- Advertisement -

அதே சமயத்தில் பேட்டிங்கில் திரும்ப வந்த இங்கிலாந்து மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்துவீச்சாளர்களின் கேள்விக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் யாரிடமும் பதில் இல்லை. அவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். முடிவில் இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு சுருண்டு 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

தற்பொழுது இங்கிலாந்து அணி ஆறு போட்டிகளில் விளையாடி பங்களாதேஷ் அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தான், இலங்கை அணி வரையிலும் தோற்று, ஐந்து ஆட்டங்களை இழந்து இருக்கிறது. எனவே தற்பொழுது இங்கிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பிலிருந்து முதல் அணியாக வெளியேறிவிட்டது.

இங்கிலாந்து அணியின் ஆட்ட அணுகுமுறை அதிரடியானது. அவர்களுடைய இந்த அணுகுமுறை இந்திய சூழ்நிலையில் ஆடுகளங்களில் சரிவரவில்லை. அவர்கள் விக்கெட்டுகளை மிகவும் மலிவான முறையில் கொடுக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களால் போட்டியின் எந்த இடத்திலும் உள்ளே வர முடிவதில்லை.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து தோல்வி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் “இங்கிலாந்து இந்தியா மிக மோசமாக வீழ்த்தி இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டுக்கு டி20 கிரிக்கெட் கொண்டு வந்ததால் இங்கிலாந்து மிக மோசமாக தோல்வி அடைந்து இருக்கிறது. அவர்களில் யார் இன்னிங்சை உருவாக்குவது? ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு ரன் எடுப்பது? ஆட்டத்தை எடுத்துச் சென்று கடைசியில் யார் முடிப்பது? இப்படி அவர்களிடம் எந்த தெளிவும் கிடையாது.

தற்போது இங்கிலாந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதை பார்க்க எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் பாஸ்பால் நன்றாக இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை ஒருநாள் கிரிக்கெட் போட்டி போலத்தான் விளையாட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!