இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அந்த அணியிடம் எச்சரிக்கையாக இருங்கள் – அஜய் ஜடேஜா எச்சரிக்கை!

0
101
Ajay Jadeja

தற்போது நடந்து கொண்டிருக்கும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் எல்லா அணிகளையும் அதன் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு அணியாக ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடுகள் மிக சிறப்பாக அமைந்துள்ளது!

ஆசியக் கோப்பையில் துவக்க போட்டியில் இலங்கை அணியோடு மோதிய ஆப்கானிஸ்தான் அணி, கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்த அந்த ஆடுகளத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரூக்கியை வைத்து முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிலிருந்து இலங்கை அணியினரை எழவிடாமல் 105 ரன்களுக்கு சுருட்டி, 105 ரன்களை 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு ஷேர் செய்து 5.176 என்ற பெரிய ரன் ரேட்டில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி.

- Advertisement -

இதற்கடுத்து முதல் சுற்றில் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியில் பங்களாதேஷ் அடியோடு சார்ஜா மைதானத்தில் மோதியது ஆப்கானிஸ்தான் அணி. இந்த ஆடுகளம் கொஞ்சம் மெதுவானது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. இந்தப் போட்டியில் முதலில் சுழற்பந்துவீச்சாளர் முஜிபூர் ரகுமானை வைத்து பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பங்களாதேஷ் அணியை அதற்கு மேல் ஏற விடாமல் 127 ரன்களை மட்டுமே எடுக்க அனுமதித்தது. 127 ரன்களை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக சேஸ் செய்து வென்று, முதல் அணியாக ஆசிய கோப்பையில் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது அசத்தியிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் வலதுகை பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து, பாகிஸ்தான் இந்திய அணிகளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து இருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணியை பற்றி ஜடேஜா கூறும்பொழுது ” ஆப்கானிஸ்தான் அணி இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு அதிர்ச்சி அளித்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் கிடையாது. அவர்களிடம் பயர் பவர் இருக்கிறது. அவர்களுக்கு அவர்களின் பந்துவீச்சு பலம் பற்றி தெரிகிறது. வைத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிகிறது. இந்தியா அல்லது பாகிஸ்தான் அணிகள் இரண்டில் ஒன்றை அவர்கள் முதலில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அதற்குப்பிறகு அந்த அணியை அவர்கள் எழவே விடமாட்டார்கள். அந்தத் திறன் இந்த அடிக்கு உள்ளது ” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஆப்கானிஸ்தான் அணி தற்போது பேட்டிங்கில் அவர்களது துவக்க வீரர்களைக் கொண்டு தாங்கள் எப்படி ஆட்டத்தை ஆரம்பிக்கும் முடியும் என்ற விதத்தை வெளியில் காட்டி இருக்கிறார்கள். எனவே நீங்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் அணிக்கு ஒரு ஆய்வாளராக இருந்தீர்கள் என்றால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நீங்கள் என்ன திட்டமிட போகிறீர்கள்? ஆப்கானிஸ்தான் அணி நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும். அவர்கள் இன்னும் பலரை ஆச்சரியப்படுவார்கள் ” என்று ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான செயல்பாட்டை புகழ்ந்து கூறியிருக்கிறார்!