இந்தூர் டெஸ்ட் – இந்திய அணியில் 2 மாற்றம்! ரோகித்துக்கு சாதகமாக விழுந்த டாஸ்

0
178

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதால் இந்த போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். நடப்பு தொடரில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளங்களில் பேட்டிங்கிற்கு சாதகமாக இந்த ஆடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். இதனால் ரோகித் சர்மாவின் இந்த டாஸ் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் கே எல் ராகுல் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர் முகமது சமிக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது.

அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதால் வீரர்கள் உத்வேகத்துடன் இருக்கிறார்கள். எங்களுடைய நம்பிக்கையும் மேலோங்கி இருக்கிறது. இந்தூரில் நாங்கள் அதிக கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருக்கிறோம்.

- Advertisement -

ஆனால் இந்த ஆடுகளம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கிறது. உங்கள் திறமையை இதற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். இன்னும் நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்த போட்டியில் வென்று முதல் இரண்டு டெஸ்டில் செய்ததை மீண்டும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

எப்போதுமே நிகழ்காலத்தில் இருப்பது சிறந்தது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ஸ்மித் ஆடுகளம் காய்ந்த நிலையில் இருப்பதால் ரோகித் முதலில் பேட்டிங் செய்தது எந்த ஆச்சரியமும் இல்லை. நாங்கள் எங்களுடைய திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு ஆளாக்குவோம் என நம்பிக்கையாக இருக்கிறேன்.

இரண்டு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ஒரு பிரேக் கிடைத்தது. நிச்சயம் நல்ல விஷயம். நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியும் முடிவடைந்த விதம் நிச்சயம் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது இந்த ஓய்வின் மூலம் நாங்கள் அடுத்த போட்டிகளுக்கு தயாராக நேரம் கிடைத்தது என்று கூறினார். ஆஸ்திரேலிய அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது பாட் கம்மின்ஸ்க்கு பதில் மிட்செல் ஸ்டார்க்கும், டேவிட் வார்னருக்கு பதில் கேமிரான் கிரீனும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.