அவ்வளவு தான் முடிச்சி விட்டாங்க போங்க.. 6 ரன்களுக்கு 4 விக்கெட் அவுட்.. இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழ்ப்பு

0
146

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்துவிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சி இருக்கின்றது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுதளத்தில் முதலில டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இருந்தாலும் இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 350 ரன்கள் அடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் இரண்டு ரன்களிலும், ராகுல் 14 ரன்களிலும் ஆட்டம் இழக்க, கில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

தடுமாறிய இந்திய அணி:

நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் 108 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ஜடேஜா ஒன்பது ரன்களில் வெளியேற, பண்ட்க்கு பதிலாக களம் இறங்கிய துருவ் ஜூரல் 40 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் அரைசதம்  கடந்தார். இதனை அடுத்து இந்திய அணி 204 ரன்களுக்கு ஆறு விக்கெட் என்ற ஸ்கோருடன் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.  கருணாயர் சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் அவர் இரண்டாவது நாள் ஆட்டத்தில் வெறும் ஐந்து ரன்களை கூடுதலாக அடித்தார்.

- Advertisement -

224 ரன்களுக்கு ஆல் அவுட்:

இதன் மூலம் 57 ரன்களில் அவர் வெளியேறினார். கடந்த போட்டிகள் சதம் அடித்த வாஷிங்டன் சுந்தரும் பெரிய அளவு சாதிக்கவில்லை. அவர் 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதை  அடுத்து களமிறங்கிய சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒரே ஓவரில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.இந்திய அணி 224 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையும் படிங்க: கம்பீர் செஞ்ச அது நம்மள கடிக்காதுனு நம்புவோம்.. இந்த பிளேயிங் லெவன் தப்பானதுதான் – அஸ்வின் பேச்சு

ஒரு கட்டத்தில் 218 ரன்களுக்கு ஆறு விக்கெட் என்ற இருந்த இந்திய அணி அடுத்த ஆறு ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் அட்கின்சன் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்  தற்போது இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிசை ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

- Advertisement -