இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் சரியானதாக இல்லை என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது ஐந்தாவது போட்டியில் நடந்து கொண்டிருக்கும் லண்டன் ஓவல் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க, இந்தியா 3 வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு இருக்கிறது.
இன்னும் ஒருவர் தேவை
இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து அஸ்வின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் பிளேயிங் லெவன் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இந்தியா இன்னும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் உடன் களம் இறங்கி இருக்க வேண்டும். பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்த தொடர் சரியாக இல்லை. ஆகாஷ் தீப் காயத்திற்கு பிறகு திரும்பி வருகிறார். சிராஜ் தொடர்ந்து ஐந்தாவது போட்டியில் விளையாடுகிறார். எனவே இவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பேட்டிங் தேவைப்பட்டு இருந்தால் நான் சர்துல் தாக்கூரை வைத்து விளையாடி இருப்பேன்”
அது கடிக்காது என்று நம்புவோம்
“இந்த போட்டியில் பும்ரா இருந்திருந்தால் மூன்று வேகம் பந்துவீச்சாளர்கள் போதும். தருண் நாயரை வைத்து விளையாடுவது சரியாக இருந்திருக்கும். மேலும் இந்த ஆடுகளத்தில் இரண்டாவது மட்டும் மூன்றாவது நாளில் பந்து வீச்சாளர்களுக்கு என்ன சாதகம் இருக்கிறது? என்பது குறித்து தெரிந்த பிறகு பதில் கிடைக்கும்”
இதையும் படிங்க : கில் ரன் அவுட்.. சாய் சுதர்சனுக்கு பெரிய நிம்மதியை தந்திருக்கும்.. காரணம் இதான் – சஞ்சய் பாங்கர் பேட்டி
” நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் ஓவர் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். எனவே இந்தியா தொடர்ந்து பேட்டிங்கை தற்போது எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் ஒரு விக்கெட் விழுந்தால் இந்தியா சீக்கிரத்தில் ஆல் அவுட் ஆகிவிடும். ஆனால் வாஷிங்டன் சுந்தர் எட்டாவது இடத்தில் சிறப்பாக விளையாடுகிறார். எனவே பேட்டிங் நீளத்தை அதிகப்படுத்திய விஷயம் நம்மை கடிக்காது என்று நம்புவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.






