இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல லெக்-ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக இரண்டு உலகக் கோப்பையை வென்ற பியூஷ் சாவ்லா, 2014ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்காக ஐபிஎல் கோப்பையையும் வென்றார். 20 ஆண்டுகளுக்கு மேலான கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
36 வயதான சாவ்லா இந்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் வெளியிட்டார்.அதில்,”களத்தில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்த பிறகு, இந்த அழகான விளையாட்டுக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது, நான் களத்தை விட்டு விலகினாலும், கிரிக்கெட் எப்போதும் என்னுள் வாழும்.”
2 உலக கோப்பை வென்றவர்
“இந்த அழகான விளையாட்டு கற்று கொடுத்த உத்வேகம், பாடங்களை எடுத்துச் செல்லும் புதிய பயணத்தை இப்போது எதிர்நோக்குகிறேன்,” என்று அவர் கூறினார்.
சாவ்லா 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர்.
இந்தியாவுக்காக மூன்று டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் ஏழு டி20 போட்டிகளில் விளையாடி, மூன்று வடிவங்களிலும் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது குறித்து குறிப்பிட்டுள்ள சாவ்லா, “இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது முதல், 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியில் இருந்தது வரை, இந்த அற்புதமான பயணத்தில் ஒவ்வொரு தருணமும் ஆசீர்வாதமாக இருந்தது.”
கடினமான நாள்:
“இந்த நினைவுகள் என்றென்றும் என் இதயத்தில் பதிந்திருக்கும்,என்மீது நம்பிக்கை வைத்த ஐபிஎல் உரிமையாளர்களான பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு மனமார்ந்த நன்றி. இந்தியன் பிரீமியர் லீக் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பான அத்தியாயமாக இருந்தது,”
இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் என் மகன் யுவராஜ் சிங் ஆயிட முடியாது.. இங்க ரெண்டே பேர்தான் மாஸ் – யோக்ராஜ் சிங் பேச்சு
“அதில் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் மதித்தேன். என்னை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்கிய பயிற்சியாளர்களான ஸ்ரீ கே.கே. கவுதம் மற்றும் மறைந்த ஸ்ரீ பங்கஜ் சரஸ்வத் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த நன்றி,” என்று அவர் கூறினார். இன்று எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாள், ஏனெனில் நான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் அனைத்து வடிவங்களில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன்,” என்று சாவ்லா கூறினார்.






