பாகிஸ்தான் ஏ அணி உடன் மோதும் அட்டகாசமான இந்திய ஏ அணி ; சாய் சுதர்சன் சாதிப்பாரா? எப்போது எங்கே பார்க்கலாம்?

0
1561
Saisudharsan

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடர் தற்போது இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால், ஆசிய கிரிக்கெட் அணிகளைக் கொண்டு 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் நடத்தப்படுகிறது.

இந்தத் தொடரில் மொத்தம் எட்டு ஆசிய கிரிக்கெட் நாடுகளில் ஏ அணிகள் பங்கு பெறுகின்றன. இதில் நேபாளம் மட்டுமே தனது தேசிய அணியைக் கொண்டு விளையாடுகிறது.

- Advertisement -

இந்த எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுனைடெட் அரபு எமிரேட், நேபால் ஆகிய நான்கு அணிகளும், பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய நான்கு அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு கடந்த முறை 19 வயது உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்து பேட்டிகள் அபாரமாக செயல்பட்ட டெல்லியைச் சேர்ந்த யாஸ் துல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரின் இந்திய அணி;

- Advertisement -

சாய் சுதர்சன், நிகின் ஜோஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், யாஷ் துல் (சி), ரியான் பராக் அபிஷேக் சர்மா, நிஷாந்த் சிந்து, நிதிஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், பிரப்சிம்ரன் சிங், துருவ் ஜூரல், மானவ் சுதர், யுவராஜ்சிங் தோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங்.
காத்திருப்பு பட்டியல்
ஹர்ஷ் துபே, ஸ்னெல் படேல், நேஹால் வதேரா மற்றும் மோஹித் ரெட்கர்.

இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் ஆட்டத்தில் யுனைடெட் அரபு எமிரேட் அணியுடன் மோதிய போட்டியில் இலக்கை 26 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது. இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் யாஷ் துல் அதிரடி சதம் அடித்து அசத்தினார்.

இந்த நிலையில் இந்திய ஏ அணி பாகிஸ்தான் ஏ அணியுடன் இந்த தொடரில் மோத இருக்கிறது. இந்த வருடம் இந்திய இளம் வீரர்களின் ஆட்டம் மிகச்சிறப்பாக எல்லா மட்டத்திலும் இருந்து வருகிறது. இந்திய தேசிய அணியிலும் நிறைய இளம் வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த அணியிலும் திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே பாகிஸ்தான் அணியுடன் மோதும் ஆட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

மேலும் இந்த அணியில் துவக்க ஆட்டக்காரராக ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம்பெற்று இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் கிடைத்த துலிப் டிராபி மற்றும் இந்தத் தொடருக்கான வாய்ப்பில், அவரது முழு திறமையும் வெளிப்படாமல் இருக்கிறது. இந்த போட்டியில் அவர் சாதிக்க வேண்டுமென எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகள் மோதும் போட்டி வருகின்ற 19ஆம் தேதி புதன்கிழமை இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மதியம் இரண்டு மணிக்கு துவங்கி நடைபெற இருக்கிறது. இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஆன்லைனில் ஃபேன் கோட் அப்ளிகேஷனில் பார்க்கலாம்.