இந்திய கிரிக்கெட்

ஆஸி ஏ டெஸ்ட்.. 208 ரன்.. சாய் சுதர்சன் படிக்கல் அசத்தல்.. ருதுராஜ் ஏமாற்றம்.. இந்திய அணி கம் பேக்

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி மீண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்திய ஏ அணி ருதுராஜ் தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று இருக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்னால் பிசிசிஐ இந்திய ஏ அணியை அங்கு அனுப்பி வைத்து பயிற்சியில் ஈடுபட வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மோசமாக சுருண்ட இந்திய அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய ஏ அணியின் கேப்டன் ருதுராஜ் கோல்டன் டக், இன்னொரு துவக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் 7 ரன்கள் எடுத்து பெரிய ஏமாற்றம் கொடுத்தார்கள்.

இதைத்தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் 21, தேவ்தத் படிக்கல் 36 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல நம்பிக்கை தந்தார்கள். முடிவில் இந்திய அணி 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பிரண்டன் டக்கெட் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

கலக்கிய மூன்று இந்திய வீரர்கள்

இது தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி 195 ரன்கள் எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனே 131 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய முகேஷ் குமார் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் 12 ரன்னில் ரன் அவுட் ஆகினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ருதுராஜ் 6 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து மீண்டும் ஏமாற்றம் தந்தார்.

இதையும் படிங்க : 5 ஓவர் 121 ரன் விளாசல்.. உத்தப்பாவின் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றது.. ஹாங்காங் சிக்ஸஸ் தொடர்

இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் 185 பந்தில் 96* ரன்கள், தேவ்தத் படிக்கல் 167 பந்தில் 80* ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். இந்த ஜோடி 178 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து,120 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts