இந்திய கிரிக்கெட்

135 ரன்.. அடுத்த ஜடேஜாவின் அதிரடி பெர்ஃபார்மன்ஸ்.. இந்திய அணி 2வது சுற்றுக்கு தகுதி

இந்திய ஏ அணி நேற்று ஆசியா கப் ரைசிங் ஸ்டார்ஸ் டி20 தொடரில் ஓமான் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இந்திய அணி இந்த தொடரில் முதல் போட்டியில் யுஏஇ அணிக்கு எதிராக மெகா வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், நேற்றைய போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கியது.

சிறப்பான பந்து வீச்சு

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஓமான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஹமாத் மிஸ்ரா 16 பந்துகளில் 32 ரன்கள், இடத்தில் வந்த வாசிம் அலி ஆட்டம் இழக்காமல் 45 பந்தில் 54 ரன்கள் எடுத்தார்கள்.

இறுதியாக ஒமான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் குர்ஜப்னித் சிங், சுயாஸ் ஷர்மா தலா இரண்டு விக்கெட்கள், ஹர்ஸ் டுபே, வைசாக் விஜயகுமார் மற்றும் நமன் திர் மூவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

அடுத்த ஜடேஜா அதிரடி

இதைத்தொடர்ந்து விளையாட வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வைபவ் சூர்யவன்சி 13 பந்தில் 12 ரன்கள், பிரியன் ஆர்யா 6 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். தொடர்ந்து வந்த நமன் திர் 19 பந்தில் 30 ரன், நெகில் வதேரா 24 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : சிஎஸ்கே பிளான் தெரிஞ்சதுமே.. ஜடேஜா என்கிட்ட இதைத்தான் சொன்னார் – ஆர்ஆர் உரிமையாளர் பேட்டி

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடி ஹர்ஸ் டுபே இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 44 பந்தில் 53 ரன் எடுத்தார். இந்திய அணி 17.5 ஓவரில் நான்கு விக்கெட் இழந்து இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்து இரண்டாவது சுற்று தகுதி பெற்றது. தற்போது இந்திய கிரிக்கெட்டில் அடுத்த ரவீந்திர ஜடேஜாவாக ஹர்ஸ் டுபே பார்க்கப்படுகிறார். அவரைப் போலவே இடது கையில் சுழல் பந்துவீச்சு சிறப்பான முறையில் பேட்டிங் செய்யக்கூடிய இளம் வீரராக உருவாகி வருகிறார்.

- Advertisement -
Published by

Recent Posts