144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா – இரண்டாவது நாளும் தொடரும் இந்திய அணியின் ஆதிக்கம்!

0
421

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாக்பூரில் நேற்று தொடங்கியது . நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா .

இதனைத் தொடர்ந்து பாடிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் இருக்கிறது . 77 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக ஆடியது . ஆட்டம் ஆரம்பித்த முதல் ஒரு மணி நேரத்திற்கு எந்த விக்கெட்டையும் இழந்து விடக்கூடாது என்ற பொறுப்புடன் ஆடினர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா .

- Advertisement -

இந்நிலையில் டாப் மர்பி வீசிய பந்துவீச்சில் 21 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அவருக்குப் பின் வந்த புஜாரா ஏழு ரன்களில் மர்பி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் . கேப்டன் ரோஹித் சர்மா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி உணவு இடைவேளை வரை சிறப்பாக ஆடினர் . உணவு இடைவேளைக்குப் பின் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலியின் விக்கெட்டையும் கைப்பற்றினார் மர்பி . அறிமுகப் போட்டியில் களம் இறங்கிய சூரியகுமார் யாதவும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் எட்டு ரண்களில் ஆட்டம் இழந்தார் .

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது ஒன்பதாவது சதத்தை நிறைவு செய்தார் . 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்திருந்த அவர் கம்மின்ஸ் வீசிய பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார் . அவரைத் தொடர்ந்து வந்த அறிமுக வீரர் ஸ்ரீகர் பரத் எட்டு ரண்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 240 ரன்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது .

அதன் பின் ரவீந்திர ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார் . இந்த ஜோடி எட்டாவது விக்கெட் இருக்கு 81 ரன்கள் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது . இந்திய அணி இன்றைய ஆட்டு நேர முடிவில் 321 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 66 ரன்கள்டனும் அக்சர் பட்டேல் 52 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர் . இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்று இந்த டெஸ்ட் போட்டியில் வலுவான இடத்தை பெற்றிருக்கிறது . ஆஸ்திரேலியா அணி தரப்பில் அறிமுக வீரரான டாட் மர்பி 82 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -