INDA vs ENGL.. கடைசி 2 போட்டி.. இந்தியா ஏ அணி அறிவிப்பு.. ரிங்கு திலக் வர்மாக்கு இடம்.. சீனியர் அணியை போல் பலமான டீம்

0
6245

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதற்கு முன் 4 போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் நிலையில் இரண்டு நாட்கள் கொண்ட முதல் போட்டி ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி 13இல் டிராவில் முடிந்தது.

பின்னர் 4 நாட்கள் பயிற்சி ஆட்டம் கொண்ட இரண்டாவது போட்டி ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 553 ரன்களும் இந்திய அணி 227 ரன்களும் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணி டிக்ளர் செய்தது.

- Advertisement -

தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ள இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து இருக்கிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் நடைபெறும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற 331 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது நான்கு நாள் பயிற்சி ஆட்டம் கொண்ட இந்திய ஏ அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய ஏ அணியில் திலக் வர்மா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் கடைசி இரண்டு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ரிங்கு சிங் கடைசி நான்கு நாள் ஆட்டத்திற்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா ஏ அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிங்கு சிங் சமீபத்தில் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் ரிசர்வ் வீரராக இடம் பெற்று இருந்தார். அவர் இதுவரை 43 முதல் தர போட்டிகளில் விளையாடி 58.47 பேட்டிங் சராசரியில் 3099 ரன்களைக் குவித்துள்ளார். இவரது சக வீரரான உத்தர பிரதேச அணியின் யாஷ் தயாள் கடைசி இரண்டு ஆட்டங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பர் குமார் குசாக்ரா மற்றும் ரயில்வேயின் உபேந்திர யாதவ் மாற்று விக்கெட் கீப்பர்களாக இணைய உள்ளனர். இந்த ஜோடி கே எஸ் பரத் மற்றும் துருவ் ஜூரேல் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால் அவர்களுக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் இவ்விரு பயிற்சிப் போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுந்தர் முதலில் தனது மாநில அணியுடன் கோவையில் ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.

மூன்றாவது, நான்கு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி

அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), பி சாய் சுதர்சன், ரஜத் படிதார், திலக் வர்மா, ரிங்கு சிங், குமார் குஷாக்ரா, வாஷிங்டன் சுந்தர், ஷம்ஸ் முலானி, அர்ஷ்தீப் சிங், துஷார் தேஷ்பாண்டே, வித்வத் கவேரப்பா, உபேந்திர யாதவ் (WK), ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.