INDA vs ENGL.. இந்திய ஏ அணி இன்னிங்ஸ் வெற்றி.. இங்கிலாந்து லயன்ஸ் போராடி தோல்வி.. சர்பராஸ் கான் நாயகன்

0
88
IND A

இந்தியா வந்துள்ள இலங்கை லயன்ஸ் அணி அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஏ அணிவுடன் விளையாடியது.

இதன் முதல் போட்டியில் இந்திய அணி ரஜத் பட்டிதார், சாய் சுதர்ஷன், கேஎஸ்.பரத், மானவ் சுதார் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் போராடி டிரா செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னால் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், குஜராத் அகமதாபாத் மைதானத்தில் டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் ஆட்டம் போல் இல்லாமல் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் 152 ரன்களுக்கு இங்கிலாந்து லயன்ஸ் அணியை சுருட்டினார்கள். ஆகாஷ் தீப் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 105, சர்ப்ராஸ் கான் 161 என அதிரடியாக ரன்கள் குவிக்க, இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து நேற்று மூன்றாவது நாள் தனது இரண்டாவது இன்னிங்ஸை 338 ரன்கள் பின்தங்கி ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது.

இதையும் படிங்க : வீடியோ.. ரிவ்யூ எடுக்காமல் கடுப்பாக்கிய பரத் ரோகித்.. சொல்லி எடுத்த பும்ரா

இன்று கடைசி மற்றும் நான்காவது நாளில் விளையாடிய அந்த அணி மேற்கொண்டு 17 ரன்கள் மட்டும் சேர்த்து 321 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் சவுரப் குமார் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். 161 ரன்கள் குவித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் சுற்றுப்பயணத்தில் சில இங்கிலாந்து இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். மேற்கொண்டு இவர்களில் இருந்து யாரையாவது தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அணி தேர்ந்தெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.