கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இங்கிலாந்துக்கு எதிரான டி20.. ஸ்மிருதி மந்தானா சாதனை.. மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற டாப் 5 வெற்றி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நார்டிங்காமில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா அபாரமாக சதம் அடித்தார். இதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த சூழலில் இந்திய மகளிர் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற ஐந்து மிகப்பெரிய வெற்றிகளை ரன்கள் வித்தியாச அடிப்படையில் தற்போது பார்க்கலாம்.

டாப் 5 வெற்றி:

2018 ஆம் ஆண்டு மலேசியா மகளிர் அணிக்கு எதிராக இந்திய அணி களம் இறங்கி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோன்று 2022 ஆம் ஆண்டு யுஏஇ மகளிர் அணி எதிராக களம் இறங்கிய இந்திய அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எட்பாஜஸ்தனில் நடைபெற்ற பார்படாஸ் மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இங்கிலாந்துக்கு எதிராக 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது தற்போது நான்காவது மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

- Advertisement -

ஸ்மிருதி மந்தனா சாதனை:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.இதனிடையே, முதல் டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தானாவும் செபாலி வர்மாவும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதையும் படிங்க: இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடப்பது உறுதி.. அடுத்த மாதம் வெளியாகும் அறிவிப்பு.. முழு விவரம்

இதன் மூலம் அதிக முறை 50 ரன்கள் டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் சேர்த்த ஜோடி என்ற பெருமையை மந்தானா, செபாலி வர்மா படைத்திருக்கிறார்கள். இந்த ஜோடி மொத்தமாக 21 முறை 50 ரன்கள் மேல் அடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தானா பெற்றார். இதில் 62 பந்துகளில் அவர் 112 ரன்கள் சேர்த்தார். இதில் 15 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

- Advertisement -
Published by

Recent Posts