இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடப்பது உறுதி.. அடுத்த மாதம் வெளியாகும் அறிவிப்பு.. முழு விவரம்

0
152

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான  அரசியல் காரணங்களால் இரு நாடுகளும் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் வெறும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடரின் மட்டும் தான் மோதி வந்தது. இந்த சூழலில் கடந்த மே மாதம் இருநாட்டுக்கும் இடையே மீண்டும் பதற்றமான சூழல் நிலவியது.

இதை அடுத்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் இனி கிரிக்கெட் போட்டிகளில் மோதி கொள்ளாது என்ற நிலை ஏற்பட்டது. இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தியா பாகிஸ்தான் நேரடியாக மோதவில்லை என்றால் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்று பணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியா,பாகிஸ்தான் போட்டி:

இந்த சூழலில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்தப்படும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஏற்கனவே முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ஆசிய கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது.

அதற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் பாகிஸ்தான் அணி விளையாடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெறுவதால் இம்முறை ஆசியக் கோப்பை போட்டிகள் டி20 வடிவத்தில் தான் நடத்தப்படும். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், யுஏஇ, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

- Advertisement -

ஹைபிரிட் மாடலில் போட்டி:

இந்த தொடருக்கான அட்டவணை அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்தது. அந்த தொடர் இந்தியாவில் நடத்தப்பட போகிறது.

இதையும் படிங்க: வயசு பையன் மயங்க் யாதவ் பண்ண முடியாத அதை.. பும்ரா பண்றது அதிசயம்.. யோசிச்சு பாருங்க – ராபின் உத்தப்பா பேச்சு

இதனால் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு லீக் போட்டிகளில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்திருந்தது. அதே பாணியில்தான் தற்போது ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றது. ஆசிய கோப்பைத் தொடர் இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி இருப்பது ரசிகர்களின் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இது டி20 உலக கோப்பைக்கு நல்ல பயிற்சிகரமாக அனைத்து அணிகளுக்கும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -